ஜெர்மனி சென்றுள்ள இந்தியபிரதமர் நரேந்திரமோடி அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லை பெர்லினில் நேற்று சந்தித்துபேசினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பியநாடுகளில் பிரதமர் நரேந்திரமோடி 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்ட மாக நேற்று முன்தினம் அவர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார்.
அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லை பிரதமர் மோடி நேற்று சந்தித்துபேசினார். அப்போது சைபர் குற்றம், ரயில்வே பாதுகாப்பு, நகர்ப்புற வளர்ச்சி, திறன் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இருநாட்டு பிரதமர் களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகளால் ஜெர்மனியுடனான உறவில் விரிசல்ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஞ்சலா மெர்க்கல் கூறியபோது, இனிமேல் அமெரிக்காவை சார்ந்து இருக்கப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் ஜெர்மனி தனது உறவைவலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும்வகையில் ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. மேலும் தென் சீனக்கடல், இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு எதிரானவியூகங்கள் குறித்தும் மோடியும் ஏஞ்சலாமெர்க்கலும் ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.