கோத்ராஜ் மீனா என்பவர், மத்திய பாதுகாப்புப்படை வீரராக இருந்துவருகிறார். 2014 ஆம் ஆண்டு, காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலத்தகாயமடைந்தார். அந்தச் சண்டையின்போது, அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கழுத்தில் ஒருகுண்டு பாய்ந்தது. அதனால், அவருக்கு சரியாகப் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சரியாக நடக்கமுடியாமலும் போனது.
85 சதவிகித அளவு பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துவருகிறார். நேற்று, மீனா உள்பட நான்கு பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வீரப் பதங்கங்களை வழங்கினார். அப்போது, விருது வாங்குவதற்கு நொண்டியபடியே மீனா மேடைக்கு ஏறிவந்தார். மீனாவின் மார்புப்பகுதியில் விருதைக் குத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், 'ப்ரோட்டாக்காலை' மீறி பாதுகாப்புப்படை வீரரைக் கட்டியணைத்தார். அதன்பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், 'பாதுகாப்புப்படை வீரர் கோத்ராஜ் மீனாவின் வீரத்தை நினைத்தும், மன உறுதியை நினைத்தும் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.