பிரிட்டனில் லண்டன் பிரிட்ஜில் நடந்துசென்றவர்கள் மீது வேனை மோதசெய்தும், பரோ மார்க்கெட் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கியும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் பொது மக்கள் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீஸ் சுட்டுக்கொன்றது. இந்த கோழைத் தனமான தாக்குதலுக்கு உலக நாட்டு தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லண்டன் பயங்கரவாத தாக்குதலுக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “லண்டனில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் அதிர்ச்சி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு நாங்கள் கடும்கண்டனம் தெரிவிக்கிறோம். என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளது, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என குறிப்பிட்டு உள்ளார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.