ஏழு அம்சதிட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு நிர்ணயித் துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் கூறினார்.
நீர்ப் பாசன வசதியை அதிகரிப்பது, தரமான விதைகள் அளிப்பது, அறுவைக்கு பிந்தைய தானியஇழப்பை தடுப்பது உள்ளிட்ட 7 அம்ச திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.
இந்நிலையில் குஜராத்மாநில், ஆனந்த் நகரில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, ''வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிசெய்வதே முந்தைய நடைமுறையாக இருந்தது. ஆனால் நாங்கள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். 7 அம்சதிட்டம் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித் துள்ளது.
துளி நீருக்கு அதிகபயிர்’ என்ற இலக்குடன் அதிகநிதி ஒதுக்கீட்டில் நீர்ப்பாசன வசதிகள் செய்வது, விவசாயிகளுக்கு தரமானவிதைகள் வழங்குவது, மண்வளத்தை காப்பது, அறுவடைக்கு பின் தானியத்தை பாதுகாக்க கிட்டங்கிகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைப்பது, உணவு பதப்படுத்துதல் மூலம் தானியத்தின்மதிப்பை கூட்டுவது ஆகியவை 7 அம்ச திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இவை தவிர, தேசியவேளாண் சந்தை, மின்னணு தகவல் பரிமாற்ற சந்தைகள், புதிய பயிர்காப்பீடு திட்டம், கோழி, மீன் வளர்ப்பு, தேனீவளர்ப்பு உள்ளிட்ட துணைத் தொழில்களை ஊக்குவிப்பது ஆகியவையும் இத்திட்டத்தில் உள்ளன.
மானிய விலை யூரியா, விவசாயம் தவிர பிறபயன்பாட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில் வேப்ப எண்ணெய் கலந்தயூரியா அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம்கோடி சேமிக்கிறது. விவசாயிகளுக்கு இதுவரை 7 கோடி மண்வள அட்டைகளை மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது'' என்றார் பிரகாஷ் ஜவடேகர்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.