பொங்கலுக்கு ஏன்டா 80 ரூவான்னு கேட்க திரானியே இல்லாம கவர்மென்ட்டை திட்றது சரியா?

இது என்ன சம்பிரதாயமோ பல பேர் நேத்து ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லை இங்கு போஸ்ட் பண்ணிருந்தார்கள். இதில் பல பாருங்க அநியாயத்தை 5% வரி 12% வரி 18% வரினு மோடியை மோடு முட்டி அளவு திட்டியிருந்தார்கள்.

 

100த்துக்கு மேல அப்படி பட்ட போஸ்ட் பார்த்ததில் ஒன்று புரிந்தது………35 ரூவாய்க்கு காப்பி ஏன்டா விக்கிறேன்னு கேட்க வக்கில்லை ஆனா அதுக்கு 5% வரி கட்டியதர்க்கு பொங்குகிறார்கள். இன்னும் சில பேர் பாருங்க சார் முருகன் இட்லி கடையில கூட நான் வரி கட்டினேன்னு போட்ட பல பேருக்கு அங்கே ஏன் இட்லி 50 ரூவாய்க்கு விற்க படுகிறது, சட்னி கின்னியில தரும் பொங்கலுக்கு ஏன்டா 80 ரூவான்னு கேட்க திரானியே இல்லாம கவர்மென்ட்டை திட்றது சரியா?

 

 அட அப்ரன்டிஸ்களா இந்த வரி கட்டாம தான் இவ்வளவு நாள் இந்த பவன்கள் எல்லாம் தன் வியாபாரத்தை பெருக்கி கொண்டே ஒரு பக்கம் இருந்து கொண்டு இன்னொரு பக்கம் லாஸ் லாஸ் லாஸ்னு சொல்லி சொல்லி ஒவ்வொருத்தனும் பிள்ளையார் கோயில் கணக்கா பின்கோடுவுக்கு ஒன்னு ரெண்டுனு திறந்துகிட்டே இருக்கானுங்க ஆனா மக்கள் கஸ்டப்படுவாங்கனு முதலை கண்ணீர் வேற,,,,,,,,,, 

 

காக்கா எச்சம் போல 150 தோசைக்கு கொஞ்சம் சட்னி எக்ஸ்ட்ரா தாடான்னா அது எக்ஸ்ட்ரா சார்னு 5-10 ரூவா புடுங்கும் இந்த புடுங்கிகளா மக்கள் பிரச்சினையை நினைச்சு வருத்தப்படுவாங்க…………இந்த வரி வரலைனா நாம இன்னும்பின்னோக்கி தான் போவனும்,

 

ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க, சில்லியா கூட இருக்கலாம் உண்மை இது தான். இந்த மாதிரி வரி கட்ட சொல்லி இருக்கிற சர்க்கார் தான் நோட்டு அடிக்கிறாங்க அவங்க நினைச்சா நோட்டை மட்டும் அடிச்சிகிட்டே போலாம் ஒத்த ரூவா வரி போடாம் ஆனா அபப்டி பண்ணினா நீங்கல்லாம் பொது கழிப்பிடத்துக்கு அவசரத்துக்கு ஒன்னுக்கோ – ரெண்டுக்கோ போகனும்னா கூட பல 2000 தாள்களை தரும் அளவுக்கு பண வீக்கம் ஏற்பட்டு அப்புறம் வெனின்ஸுலா, கிரீஸ்னு போல நாடு நாசமா போய்டும்.

 

அதெல்லாம் சரி நாங்க ஏழை, நடு கிளாஸ்னு சொல்றவங்க தண்ணி பாட்டில் , பிளாஸ்க், சோத்து மூட்டையை கட்டிகிட்டு போனா ஆட்டோமேட்டிக்கா இந்த பவன்கள் விலையை குறைப்பாங்க இப்ப அவங்க லாபம் 300 – 450 சதவிகிதம்ங்கோ.

 

சரி இம்புட்டு மார்ஜின் வருதே இந்த பாவபட்ட மக்களுக்காக செலுத்த வேண்டிய 5% வரி நாம செலுத்தி நம்ம மார்ஜினை 300% சதவிகித்துல இருந்து 295% சதவிகதம் ஆக்கிகுவோம்னு ஒருவர்  கூட நினைக்காத வரை அந்த சிறு , குறு, பெத்த வணிகர்களை நம்பவேண்டாம். GST வரியை ஒரு பூதம் போல அனுமானம் செய்து ஊடகங்களும் வியாபாரிகளும் பரப்பி வருகின்றனர்.

 

 சாமானிய மக்கள் பயன்படுத்தும் எல்லா உணவுபொருள்களுக்கும் வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. யாரெல்லாம் பிராண்டட் உணவு பொருள்களை வாங்குகிறார்களோ அவர்களுக்கு தான் GST வரி. யாரெல்லாம் பொருளை விற்பதற்கு விளம்பரம் செய்கிறார்களோ அவர்களுக்கு தான் வரி

 

சாமானிய சிறு குறுதொழில் உற்பத்தியாளர்களுக்கு வரி இல்லை (20 லட்சம் வரை ) முக்கியமாக ஹோட்டல் முதலாளிகள் தான் ரொம்ப பொங்குறாங்க சாதாரண ஹோட்டல் வெறும் 5 % AC ஹோட்டலுக்கு தான் 18 % இன்னொரு முக்கியமான விஷயம் யாருக்கும் புரியவில்லை

 

ஏற்கனவே நாம் பல வரிகளை கட்டி தான் பொருள்களை வாங்கி வருகிறோம் ஆனால் வெளிப்படையாக தெரியாது. GST ஒரே வரி என்பதால் வெளியே தெரிகிறது எல்லோரும் நேர்மையாக வியாபாரம் செய்தால் கட்டாயம் விலை குறையும். உண்மை பல நேரம் கசக்க தான் செய்யும் ஆனால் எதிர்காலம் நன்றாக இருக்கும்..

One response to “பொங்கலுக்கு ஏன்டா 80 ரூவான்னு கேட்க திரானியே இல்லாம கவர்மென்ட்டை திட்றது சரியா?”

  1. S.Kamaraj says:

    Very good article. Our people are being peppered with false propaganda by commercial establishments and various political parties. In this atmosphere, we need articles like these to spread the truth. Thanks.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...