காங்கிரசை தாக்கிய ஏ,கே.அந்தோனி

இன்றைய சூழ்நிலையில், மோடியை வீழ்த்துவது என்பது காங்கிரசால் முடியாது. மக்கள் பேராதரவுடன் வலிமை மிக்க தலைவராக மோடி உள்ளார். இவரை வீழ்த்த வேண்டுமானால், எதிர்கட்சிகள் ஒன்றிணையவேண்டும். அப்படி சேர்ந்தாலும் மோடியை வீழ்த்தமுடியாது. கட்டுப் படுத்தலாம். 

 

அதோடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படவேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறினால் மக்களின் எதிர்ப்பைத்தான் பெறமுடியும். 

 

ஜி.எஸ்.டி., சிறப்பு கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யை ஜனாதிபதி பரனாப் முகர்ஜி வரவேற்று பேசுகிறார். ஆனால், காங்கிரஸ் எதிர்க்கிறது. ஏன் இந்த முரண்பாடு. ராகுல் காந்திக்கு எதிர்காலம் உள்ளது. ஆனால், அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். 

 

அதோடு, ஒட்டு மொத்த காங்கிரசை சீர்படுத்த வேண்டும். தொடர்தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அதிலிருந்து கட்சி பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மாறாக, பீகார் படுதோல்வியிலருந்து பாடத்தைக் கற்றுக் கொண்ட பா.ஜ., உ.பி.,யில் வரலாற்று வெற்றியைபெற்றது.

 

பா.ஜ.,வில் தலைமை சொல்வதைகேட்டு நடக்கின்றனர். ஆனால், காங்கிரசில் சில தலைவர்களின் சுயநலத்தால் தலைமை தடுமாறுகிறது. உ.பி., வெற்றிக்கு ஓட்டிங்மிஷின் கோளாறு என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர். அப்படி என்றால் இதுவரை நாம்பெற்ற வெற்றியும் அப்படித்தானே என மக்கள் நினைப்பார்களே என்ற அடிப்படை அறிவுகூட இல்லை.

 

இந்தியாவில் அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. இனி கவர்ச்சியான தலைவர்களுக்கு இடமில்லை. மைனாரிட்டி, மைனாரிட்டி என சொல்லி அவர்களுக்கும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. இப்படிதொடர்ந்து பேசி,பேசி வந்ததால் மெஜாரிட்டி பிரிவினர் நம்மீது கோபமடைந்தனர். பொதுவாக ஏழை மற்றும் தலித்மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்களித்து வந்தனர். இவர்கள் தற்போது பா.ஜ., பக்கம் சென்றுவிட்டனர். 

 

ரூ.500 1000 ஒழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவைகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகம் காணப்படுகிறது. 3 வருட பா.ஜ., ஆட்சியில் ஊழல்குற்றச்சாட்டு எதுவும் பெரிதாக இல்லை. என்ன செய்கிறோம், என்ன செய்யப்போகிறோம் என்பதை மிக தெளிவாக மோடி மக்களிடம் எடுத்துச் சொகிறார். 

 

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ரண்டு வருடம் இருக்கிறது. இப்போதிலிருந்தே இதற்காக காங்கிரஸ் கட்சியினர் களத்தில் இறங்கி பணியாற்றவேண்டும். இல்லை என்றால் 2019 தேர்தலிலும் நமக்குசாதகமாக இருக்காது – 

 

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஏ,கே.அந்தோனி  

 

* காங்கிரசை மனுஷன் இப்படி போட்டு தாக்கி விட்டா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.