ஜி.எஸ்.டி. உணவுபொருட்கள் விலை குறையும்

ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் ஜிஎஸ்டி., எவ்வளவு வசூலிக்கவேண்டும் என்பது குறித்து மத்திய நேரடி வரிவாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ஜி.எஸ்.டி.,க்கு முன்…

இதுகுறித்து வாரியம் தரப்பில் கூறப்படுவதாவது:ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் தரப்படும் உணவுபொருட்களுக்கு, 12 அல்லது 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தவேண்டும். இந்தவரி, மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் மாநில ஜி.எஸ்.டி., என இரண்டும் உள்ளடக்கியது.

ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன், சேவைவரி, சேவைகட்டணம், வாட் ஆகியவை வசூலிக்கப்பட்டன. இதில், வாட் என்பது உணவுபொருட்கள் மீது விதிக்கப்படுவது. சேவைவரி என்பது, உணவகம் அளித்த சேவைக்காக வசூலிக்கப்படுவது. சேவைகட்டணம் என்பது அரசுக்கு செலுத்தப்படுவது இல்லை. சம்பந்தப்பட்ட உணவகம் வசூலிப்பது. அரசு விதிகளின்படி இதுகட்டாயம் அல்ல.

 

ஜி.எஸ்.டி., அமலுக்கு பிறகு

.* ஏ.சி., வசதி இல்லாத ஓட்டல்கள் ( மதுசப்ளை வசதி இல்லாதது) – 12 சதவீதம்

* ஏ.சி., வசதி உள்ள ஓட்டல்கள் (மதுசப்ளை வசதி உள்ளது, மது சப்ளை வசதி இல்லாது என இரண்டுக்கும் பொருந்தும்) – 18 சதவீதம்

* ஏ.சி., வசதி இல்லாத , மதுசப்ளை வசதி உள்ள உணவகங்கள் – 18

* ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் வரை விற்று முதல் உள்ள உணவகங்கள் – 5 சதவீதம்

* மது சப்ளை உள்ள ஓட்டல்களில் உணவுசாப்பிட்டால், உணவுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி., உண்டு. மது வாட்வரி கட்டமைப்பில் இடம் பெறுகிறது.

* ஜி.எஸ்.டி., அமலுக்கு முன், உணவு பொருட்களை தயாரிக்கவாங்கப்படும் பொருட்களும் செலுத்தப்படும் வரிகளை, கழித்துகொள்ளும் உள்ளீட்டு வரி சலுகை வசதி இல்லை. ஆனால், ஜி.எஸ்.டி., அமலுக்குபிறகு இந்த சலுகை உள்ளது. எனவே, ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தாங்கள் ஏற்கனவே செலுத்தியவரியை, திரும்ப பெற முடியும். இதன்காரணமாக உணவுபொருட்கள் விலையை அவர்கள் குறைக்கவேண்டும்.

இவ்வாறு வாரியம் கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...