தற்போது ஆப்டிகல்ஸ் கடைகள் மாநில நிறுவனங்கள் சட்டப்படி அமைக்கப்பட்டு, செயல்பட்டுவருகின்றன. ஆனால், அவற்றின் மீது எந்த கண்காணிப்பும் மேற் கொள்ளப்படு வதில்லை. எனவே ஆப்டிகல்ஸ் கடைகளுக்கான விதிமுறைகளை வரையறைசெய்து, அவற்றை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி.நட்டா உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கண்மருத்துவர்கள் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்குழுவின் உறுப்பினரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவததுறை பேராசிரியருமான அத்துல்குமார் கூறியபோது, “கண் மருத்துவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இதுதொடர்பாக பேச உள்ளோம். இதற்கு முன் அரசு சார்பில் ஏதேனும் விதிகள் உள்ளனவா என ஆராய உள்ளோம். ஆலோசனையில் எடுக்கப்படும்முடிவுகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். பின்னர் இவை அமலுக்குவரும்” என்றார்.
கண் மருத்துவர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பம் பயின்றவர்கள் சகலவசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் கண்பரிசோதனை செய்கின்றனர். மூக்குக் கண்ணாடிகளுக்கு இவர்களின் பரிந்துரையை பெறுவதேசரியானது. ஆனால் ஆப்டிகல்ஸ் கடைகளே பரிசோதனை மேற்கொள்வதால் பலநேரங்களில் பிரச்சினை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே ஆப்டிகல்ஸ்கடைகளை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கண் பரிசோதனை கவுன்சில் புள்ளிவிவரப்படி, நாட்டில் சுமார் 45 கோடி மக்களுக்கு கண்பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த எண்ணிக்கை, கண் பரிசோதனைகளில் ஏற்படும் 50 சதவீத தவறுகளால் அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் கண்பரிசோதகர்கள் நாட்டுக்கு தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது வெறும் 9,000 கண் பரிசோதகர்கள் மட்டுமே உள்ளனர்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.