மண்டபம் பகுதியையும், பாம்பனையும் இணைக்கும்வகையில், மேலும் ஒரு சாலைப் பாலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியையும், பாம்பனையும் இணைக்கும்வகையில், மேலும் ஒரு சாலைப் பாலம் அமைக்கப்படும் என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழா தொடர்பான கட்டுமானப் பணிகளை, வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்தனர். இவர்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மணிமண்டபத்தின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.


இதுகுறித்து பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது. கலாமின் 2 ஆவது நினைவு தினமான ஜூலை 27 ஆம் தேதி, பிரதமர் நரேந்திரமோடி மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.


இந்த விழாவில், நாடு முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். இந்த திறப்பு விழா நாட்டில் மிகப்பெரிய எழுச்சியைஉருவாக்கும்.ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தையும், பாம்பனையும் இணைக்கும்வகையில், மேலும் ஒரு சாலைப்பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


ராமேசுவரம் தீவில் உள்ள முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ் கோடி வரையிலான சாலைப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இச்சாலையில் தகுந்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் திறந்துவைக்கப்படும்.
கலாம் மணிமண்டபம் ராமேசுவரம் வரும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களும் பார்வையிட்டு வழிபாடு செய்யும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...