நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருகை: 2 நாள் சாலை வழி பயணத்திற்கு கட்டுப்பாடு!

பிரதமர் நரேந்திரமோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு இருதினங்களுக்கு வெளியூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாலைவழியாக  வாகனங்களில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.


ராமேஸ்வரம் அருகே  உள்ள பேய்கரும்பு என்ற இடத்தில் கட்டப் பட்டுள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகத்தினை அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவுதினமான ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைக்க உள்ளார். இந்நிகழ்சியில் பிரதமருடன், மத்திய அமைச்சர்கள்,  தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் முக்கியபிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.

மேலும் அதே நாளில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி ராமர்தீர்தம் தபசு மண்டபகப் படியில் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு காலை 6 மணிமுதல் மாலை 5.30 மணிவரை திருக்கோயிலின் நடைசாத்தப்படவும் உள்ளது. 

எனவே, மேற்கண்ட இருநிகழ்ச்சிகளையும் முன்னிட்டு வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொது மக்கள் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை சாலை மார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கோ அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாத புரத்திற்கோ செல்வதை தவிர்க்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...