மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இராண்டாம் ஆண்டு நினைவஞ்சலியில், அவரது மணிமண்டபத்தை மோடி ராமேஸ்வரம் பேக்கரும்பில் திறந்துவைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியவர், ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலில் ராமேஸ்வரமும் ஒன்று என்றார். தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் உட்பட அனைத்துமாநிலங்களும் பின்தங்காது . தமிழக கிராமப்புற இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.18,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை காண்பதே கலாம் அவர்களது கனவு. 2022-ல் நாட்டின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்படுவதற்குள் கலாம் கனவினை பூர்த்திசெய்யும் வகையில், நம்நாடு எல்லா விதத்திலும் முன்னேறியிருக்க வேண்டும் . இளைஞர்கள் மீது கலாம் அன்பு வைத்திருந்தார். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபடவேண்டும் . அரசின் வேலைகள் குறித்த காலத்தில்முடித்தால், மக்களுக்கு அது குறித்து ஆச்சர்யம் ஏற்படுகிறது. நாட்டு மக்கள் தம்பின்னால், இருப்பதே மத்திய அரசு ஊக்கமுடன் செயல்படுவதற்கு காரணம் .
மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது , தொழிலாளர்களும் அரசு அதிகாரிகளும் ஓய்வில்லாமல் உழைத்து கலாம் மணிமண்டபத்தை உருவாக்கி யுள்ளனர். ஒருமணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்து அதிகாரிகள் ஓய்வில்லாமல் உழைத்தனர். கூடுதலாக பணியாற்றிய 2 மணி நேரத்திற்கு ஊழியர்கள் ஊதியம்கூட வாங்கவில்லை. இதை நினைத்து நான் பெருமையடைகிறேன், அரசு அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
இந்த விழா மேடையில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இந்த விழா மேடையில் ஜெயலலிதா இருந்திருந்தால் மணிமண்டபம் கட்டிய தொழிலாளர்களை பெரிய அளவில் பாராட்டியிருப்பார்.ராமேஸ்வரம் புனித யாத்திரை வருபவர்கள், கலாம் மணிமண்டபத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்றார்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.