தமிழக மக்கள் பாஜக பக்கமே!

இந்தியாவில் அரசியல் என்பது ஊழலற்றதாக என்றுமே இருந்ததில்லை! இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் அரசியல் என்பது ஊழல்தான்! 1998 முதல் 2004 வரை நடைபெற்ற பாஜக ஆட்சியில் திமுக போன்ற ஊழல் கட்சிகளும் இடம் பெற்றிருந்தன! ஆனால் இப்போது 2014 மே 26 ல் துவங்கியுள்ள பாஜக ஆட்சி ஊழல் இல்லாதது! வெளிப்படைத்தன்மை உடையது!

     ஒரு தந்தையைப்போல பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்காகவும் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி ஏழைகள் இல்லாத செல்வ செழிப்புள்ள பாரதத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்!

     அனைவருக்கும் ஆயுள் காப்பீடு, அனைவருக்கும் விபத்து காப்பீடு, அனைவருக்கும் ஓய்வூதியம்! ஓய்வூதியதாரரின் குடும்பத்திற்கு ரூபாய் எட்டு லட்சம் பத்து லட்சம் என முதிர்வுத்தொகை! அனைவருக்கும் தொழில் துவங்க; நடந்துவரும் தொழிலை விரிவுபடுத்த; வியாபாரம் துவங்க நடந்துவரும் வியாபாரத்தை விரிவுபடுத்த, ரூபாய் பத்து லட்சம் வரை பிணையம் இல்லாமல் ஜாமீன் இல்லாமல் குறைந்த வட்டியில் கடம் வழங்கும் திட்டத்தை பாஜக அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்திவருகிறது! இதற்காக 2015 ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடியும், 2016 ம் பட்ஜெட்டில் ஒரு லட்சத்து என்பதாயிரம் கோடியும், 2017 ல் இரண்டு லட்சத்து நாப்பத்திநாலாயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது!

     இதுவரையில் 8 கோடி நபர்களுக்கு ரூபாய் ரூபாய் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு கோடி இழைஞர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்றும் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவகத்தை திறந்துவைத்து பேசுகையில் பிரதமர் குறிப்பிட்டார்!

    இந்த வகையில் ஸ்டாட்டப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா திட்டங்களுக்கு ரூபாய் இரண்டு கோடிவரை வழங்கப்படுகிறது!

     இப்படி ஒரு ஆட்சியை இதுவரை பாரதம் பார்த்ததில்லை! அரசியலை ஒரு வியாபாரமாக கருதி, தொடர்ந்து பணம் சம்பாதிக்கலாம் என்னும் எண்ணத்தில் இருக்கும் அரசியல்வாதிகள்தான் பாஜக அரசை எதிர்க்கின்றனர்! கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கை மக்கள் ஆதரவை பெற்றது! ஆனால் அரசியல்வாதிகளும் சில தொழில் அதிபர்களும் ஊடக உரிமையாளர்களும் செய்தித்தாள் உரிமையாளர்களும் எதிர்த்தனர்! சுருக்கமாக சொல்வதானால் கள்ளப்பணம் மற்றும் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து வேறு வகையில் பிரச்சாரம் செய்தனர்! ஆனால் மக்கள் ஆதரித்தனர்! வரிகளின் பாரத்தை குறைத்து, வாட்வரி, கலால்வரி, நுழைவுவரி, மதிப்பு கூட்டுவரி, கூடுதல் மதிப்புகூட்டுவரி, என அனைத்துவகையான வரிகளையும் அந்த வரிகளோடு தரவேண்டிய லஞ்சத்தையும் அதில் ஏற்படும் கால தாமதத்தையும் தொலைத்து ஒரே வரியென வரித்தொகையை குறைத்த நடவடிக்கையைக்கூட வரிசெலுத்தாமல் கள்ளவியாபாரம் செய்துவந்த வியாபாரிகள் அரசியல்வாதிகளோடு சேர்ந்துக்கொண்டு எதிர்த்தனர்! ஆனால் மக்கள் ஆதரித்தனர்! பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சில கள்ள வியாபாரிகள் வரிகுறைப்பின் பயனை மக்களுக்கு தராமல் கொள்ளை லாபத்தை இன்னும் கூட்டி மக்களை வஞ்சித்துவருகிறார்கள்! இதை தட்டிக்கேட்டு சரி செய்யவேண்டியது மாநில அரசுகளின் கடமை!

     கணக்கில் வராத பணம் ஒழிக்கப்பட்டுள்ளது, இனி கணக்கில்வராத சொத்துகளும் ஒழிக்கப்படும்!

     தனி நபர்களின் வளர்ச்சிக்கு உதவியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும், மக்களுக்கு வரி குறைப்பும், வரியே செலுத்தாத திருட்டு வியாபாரிகளுக்கு கண்டிப்பும் வழங்கிவரும் பாஜக அரசை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்! மக்களின் விருப்பத்தை கண்டுகொண்ட மாற்றுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் பாஜக வுக்கு மாறிவருகிறார்கள்! ஜனாதிபதி தேர்தலில் பாஜக வை எதிர்த்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பாஜக வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளார்கள்! மக்கள் எவ்வழியோ அவ்வழிதான் மக்கள் பிரதிநிதிகளும் செல்லவேண்டும் என்பது நியாயமான ஒன்றுதானே!

     கட்சி என்பது வேறு ஆட்சி என்பது வேறு மாநில அரசுகள் மத்திய அரசோடு ஒத்துழைத்துதான் ஆட்சி நடத்தவேண்டும்! அதேபோல மத்திய அரசும் மாநில அரசுகளோடு ஒத்துழைத்துதான் ஆட்சிநடத்தவேண்டும்! சற்றும் அறிவற்றத்தனமாக, ”எதற்கு மத்திய அமைச்சர்களை சந்திக்கிறீர்கள்?” ”எதற்கு அவர்களுக்கு வணக்கம் சொல்கிறீர்கள்”, என்றெல்லாம் அறிக்கை விடுகிறார் இங்குள்ள எதிர்கட்சி தலைவர்!

    இவர்களின் கூட்டணியில் மத்திய காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது வணங்கி, வாழ்த்தி, கூட்டணியாக ஊழல் செய்தவர்கள்தானே இவர்கள்!

     சமீபத்தில் நான் கிராமங்களுக்கு சென்றபோது யாரும் திடீரென நம்பமுடியாத பல நிகழ்வுகள் அங்கு நடந்தன! திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, வி.சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சார்ந்த பலரும் விரும்பிவந்து பாஜகவில் சேருகிறார்கள்! அவர்கள் சொல்லும் காரணம் கள்ளப்பண ஒழிப்புக் வரிக்குறைப்பும், ஊழல் இன்மையும், மக்கள்நலத்திட்டங்களும்தான்!

     குஜராத் மாநிலத்தில் மக்கள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாஜக பக்கம் சாய்ந்துவருகிறார்கள்! மக்கள் எவ்வழியோ அவ்வழிதான் மக்கள் பிரதிநிதிகளும் செல்லவேண்டும்! தமிழகத்திற்கும் இது பொருந்தும்!

குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...