டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வுஅல்ல என்று ராஜ்ய சபாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பூடானின் டோக்லாமை கைப்பற்றும் நோக்கில் சீனா சாலைகள் அமைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் இதனைத்தடுத்து நிறுத்தினர்.
இதனால் டோக்லாம் பீடபூமியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. டோக்லாமை சீனா கைப்பற்றிவிட்டால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்படும் என்பதால் ராணுவம் அங்கு குவிக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், சீனாவுடன் ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் சீனாவின் தூதரை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியது ஏன்? நமது ராணுவம் வலிமையானதுதான். நாம் பேச்சு வார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம். இருதரப்பும் ஒப்புக்கொள்ளக் கூடிய தீர்வை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.