மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட டேவிட் கோல்மென் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வந்து விசாரணை நடத்து இந்தியா ஆர்வம் செலுத்தவில்லை என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள்_தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ்
இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர் . இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த டேவிட் கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க கோர்டில் வழக்குபதிவு செய்யப்ட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2009-ம் ஆண்டு இது குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர், இந்தியாவின் தேசிய_பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நராயணனிடம் கூறினார் . அதற்கு, நாராயணன் ஹெட்லியை மும்பை_தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு நாடுகடத்தி கொண்டுவர ஆர்வமில்லை. இந்த நேரத்தில் ஹெட்லியை நாடுகடத்தி வருவது கடினமானது . பெரும் சிக்கல் உருவாக்கும் என்று கூறினார். இவ்வாறு விக்கீலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்தாலும் தண்டனைகிடைக்கும் , அவன் இந்தியாவில் இருந்தால் இந்த காங்கிரஸ் அரசு அவனுக்கும் A/C ரூம்ல பிரியாணி சோறு போட்டு, அவனை தியாகியாக்கிவிடும்
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.