"பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா விரைவில் தமிழகம் வர உள்ளார். அவரது வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்' என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இது தொடர்பாக புதுதில்லியில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி: திருக்குறளுக்கு மத்திய அரசு அளித்த முக்கியத்துவம் உள்ளிட்ட, தமிழக நலன்சார்ந்த பல நடவடிக்கைகள் மூலம் பாஜக மீது தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொள்ள தொடர்ந்து முன் வருகின்றனர். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 22, 23, 24-ஆம் தேதிகளில் தமிழகம்வர உள்ளார். அவரது வருகையின்போது பல்வேறு கட்சிகளின் முக்கியத்தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும், தமிழக அரசியலில் திருப்பு முனையயும் ஏற்படுத்தும். தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்துவருகின்றன. தமிழக மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மாநில நலன்கள்சார்ந்து மத்திய அரசு செயல்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பதற்கு முன் அதுபற்றி முழுமையாக ஆய்வுசெய்வதுஅவசியமாகும். இத்திட்டத்தை ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் எதிர்க்கவில்லை. நெடுவாசல் பிரச்னை முடிந்துபோன ஒன்றாகும்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன். பேட்டியின் போது, தமிழகமேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் உடனிருந்தார்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.