அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் வரும் நவம்பர்மாதம் இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஐதராபாத்தில் நவம்பர் 28 முதல் 30 வரை தொழில் முனைவோருக்கான உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்கிறது.
இந்த குழுவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா தலைமைவகிக்கிறார். அவர் ஐதராபாத் வர உள்ளதாக டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார். இவாங்காவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய பயணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க பிரதிநிதி என்ற முறையில் #GES2017 மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தபயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழில் முனைவோரை சந்திப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் பிரமருடன் கைகுலுக்கும் படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் இவாங்கா வெளியிட்டுள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெறும் தொழில்முனைவோர் கூட்டம்குறித்து மோடி டிரம்ப் இடையில் வெள்ளை மாளிகையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதியதொழில் வாயப்புகளை பெறுவதற்காக இந்தமாநாடு நடத்தப்படுகிறது. அமெரிக்க அதிபரின் மகள் என்பதைத்தாண்டி 35 வயது இவாங்கா, அமெரிக்க அதிபரின் ஆலோசகராகவும் உள்ளார். குழந்தைகளுக்கான பிரச்னைகளை கையாள்வதில் சிறந்தபெண் வழக்கறிஞராக இவாங்கா திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.