நீட்தேர்வில் தமிழகத்திற்கு ஓராண்டுவிலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை மத்திய அரசிடம் வழங்கப் படும் என தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.
நீட்தேர்வில் இருந்து, தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்புவழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதனையடுத்து முதல்வர் பழனிசாமியுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டி: நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளைகாலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும். சட்டத்திற்கு நிச்சயம் ஒப்புதல் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களுக்கு மகிழ்ச்சிஅளிக்கும் தகவலை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
எந்த சட்ட சிக்கலும் ஏற்படாத வகையில் மத்திய அரசு ஆலோசித்து, நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு குழப்பம் ஏற்படாதவகையில் நீட் விவகாரத்தில் தமிழக அரசு திடமான முடிவு எடுக்கும். எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசுக்கு எதிராக மத்தியஅரசு கூறவில்லை. கடந்த ஆண்டு நடந்தது போல், இந்த ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கும் என நம்புகிறேன்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.