சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9-ஆவது மாநாடு இருநாட்கள் நடைபெற்றது.
இந்தமாநாட்டில், பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாதிமிர்புதின், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
மாநாட்டின் நிறைவில், 'ஜியாமென் பிரகடனம்' என்ற பெயரில் பிரகடனம் வெளியிடப் பட்டது.
அதில், தலிபான், ஐ.எஸ்., அல்காய்தா, கிழக்குதுர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், ஹக்கானி குழு, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், ஹிஸ்புல் உத்-தஹ்ரீர் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
குறிப்பாக, அந்தப்பிரகடனத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் இருந்துகொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகளின்பெயர்கள் முதல்முறையாக சேர்க்கப்பட்டிருந்தன.
பிரிக்ஸ் மாநாட்டில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத பிரச்னையை தீவிரமாக எழுப்பினார். இதற்கு பிறநாடுகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அவர்கள் விருப்பம்தெரிவித்தனர். இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.