தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசு அறிவித்திருந்தது. மற்றமாநிலங்களில் ஹிந்திபயிற்று மொழியாக உள்ளதால் இந்ததிட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
குமரி மகாசபை செயலாளர் ஜெயக்குமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவில் அவர் குறிப்பிடுகையில் , கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கவேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் 1986 ஆம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப் பட்டன. உண்டு உறைவிடப் பள்ளியான நவோதயாபள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் இயங்குகிறது. 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளது. இப்பள்ளிகளில் மாநிலமொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது.
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தைதவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக அரசு இந்தபள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை.
எனவே தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிடவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தமனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தமனு நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு முன்பாக கடந்த 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசின்பதிலை செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் தமிழை முதல்மொழியாக கற்பிக்க உறுதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டத்திலும் பள்ளிகள் தொடங்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்படும்.
ஒவ்வொரு பள்ளிக்கு 25 ஏக்கர் முதல் 30 ஏக்கர்வரை இடம் தேவைப்படுகிறது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டத்திலும் மத்திய அரசு நவோதயா பள்ளியை தொடங்கலாம் என்று நீதிபதிகள் அனுமதிஅளித்தனர். மேலும் நவோதயா பள்ளிக்கு தேவையான இடத்தை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் நவோதயா பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்க தமிழகஅரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அது குறித்து தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில்மனு தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.