ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்காவை சந்தித்து பேசினார். நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் தொழில் முனைவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவாங்கா இந்தியா வர உள்ளார். இந்த பயணம் குறித்து இவாங்காவுடன் உரையாடினார். மேலும் பெண்கள் உரிமை உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் பேசினர்.
இதற்கிடையே ரோஹிங்கியா இஸ்லாமிய பிரச்சனைகள் வலுவடைந்துவரும் நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சுஷ்மா சந்தித்துள்ளார்.உலகபிரச்சனையாக தீவிரமடைந்துள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு வங்கதேசம் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர் இந்தியாவும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் நிலைகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அப்துலப்பின் சையத் இடமும் சுஷ்மா கேட்டறிந்தார்.மேலும் லாட்வியா, பஹ்ரெய்ன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களையும் சுஷ்மா சந்தித்து பேசினார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.