பெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த சிலநாள்களில் குறைய வாய்ப்புள்ளது

பெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த சிலநாள்களில் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


அதேவேளையில், எரிபொருள்கள் மீதான வரியைக்குறைக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.குஜராத் மாநிலம், ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய தர்மேந்திர பிரதான் இதுதொடர்பாக கூறியதாவது:


சர்வதேச கச்சா எண்ணெய் விலையானது அமெரிக்கப் பொருளாதாரத்துடன் தொடர்புடையது. கடந்த 20 ஆண்டுகளாக இத்தகையநிலை உள்ளது. இந்த சூழலில், அந்நாட்டில் அண்மையில் நேரிட்டபேரிடரானது (புயல்) எரிபொருள் சந்தையிலும் எதிரொலித்தது.


அதன் விளைவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைஉயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இருப்பினும் கடந்த சிலநாள்களாக இந்த நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது. அடுத்து வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை சரிவடையக்கூடும். அதன் தாக்கமாக இந்தியாவிலும் எரிபொருள் விலை குறையும். அதேவேளையில் பெட்ரோல், டீசல்மீதான வரிகளைக் குறைக்கவோ, ரத்து செய்யவோ இயலாது. நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வரிவருவாய்தான் மூலதனமாக விளங்குகிறது. எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து விட்டால், நல்ல சாலைகளும், தூய குடிநீரும், தரமான கல்வி, மருத்துவமும் தேவையில்லையா?


ஜிஎஸ்டி (சரக்கு – சேவை வரி) வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்கள் விரைவில் கொண்டு வரப்படும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...