பெட்ரோல் விலை ஸ்ரீலங்காவில் 53 ருபாய்தான் ; இந்தியாவில் 73ருபாய்.. இந்த விதம் ஆட்சி செய்துவிட்டு மோடியை பெருமை சொல்வது எப்படி மாரிதாஸ் சரி?? {கேள்வி : பாலு , சூர்யா நாராயணன், இன்னும் பல புதிய போராளிகள்}
பெட்ரோல் விலை ஸ்ரீலங்காவில் 53 ருபாய் தான். பாக்கிஸ்தான் பாருங்க 44ரூபாய் தான் .. ஆனா இந்தியாவில் ஏறக்குறைய 73ரூபாய். அட இது என்ன அதிசயம் கென்யாவில் விலை 60ரூபாய் தான் தெரியுமா உங்களுக்கு…
இந்த இத்தாலி, நார்வே, பின்லாந்து, பெல்ஜியம், UK, சுவிடன் என்று இருக்கும் 28 ஐரோப்பிய தேசங்களில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா??? சராசரியாக 100ரூபாய். இந்த விதம் ஒருவேளை நமது இந்தியாவில் விலை குறைவு என்று மிமீஸ் பாடுங்களேன்… மோடி வாழ்க என்று. என்ன கசப்பு அதில் மட்டும்!
தென் அமெரிக்க நாடுகளில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா?? நியுசிலாந்து நாட்டில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா??? சிங்கப்பூர் போல நாட்டை அக்கரையோடு நிர்வாகம் செய்யும் ஒருநிர்வாகம் காண்பது கடினம் அங்கே விலை லிட்டர் 96ரூபாய்.. இங்கே எல்லாம் மோடிதான் குறைக்க கூடாது என்று கூறி இருப்பாரோ?
மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரபியா , கத்தார் போன்ற நாடுகளை அடுத்த அதிகம் கச்சா எண்ணெய் கிடைக்கும் நாடுகள் என்றால் அது அமேரிக்கா , ரஷ்யா தான்.. அவர்களே 53ரூபாய்க்கு தான் விற்கிறார்கள்.
நான் குறிப்பிட்ட அனைத்துமே நல்ல நிர்வாக திறன் உள்ள பொருளாதராத்தில் வளர்ந்தநாடுகள். அப்படி இருக்கும் இந்த நாடுகள் ஏன் விலை குறைப்பு செய்யவில்லை????
உண்மையில் விலையை குறைக்க முடியும் தான் ஆனால் கூடாது… பொதுவாகவே உலகம் முழுவதும் இருக்கும் பொருளாதர வலுவான நாடுகள் அனைத்துமே கொள்கை முடிவாக விலையை குறைக்ககூடாது என்று முடிவில் இருக்கிறார்கள்.
அது ஏன்???
அதை விளக்கும் முன்னர் இன்னொரு விவரம் நாம் பார்த்துவிடுவது நல்லது.
iea -International Energy Agency கொடுக்கும் தகவல்களை நாம் மிக உற்று நோக்க வேண்டும். அத்துடன் நன்கு கவனிக்கவும் உலக செய்திகளை.
-நார்வே 2025ல் டிசல் பெட்ரோல் கார்களை முழுமையாக தடைசெய்வோம் என்று அறிவித்துவிட்டது. -Nissan Leaf,the Tesla என்று அனைத்து தனியார் வாகன ஆராய்சியாளர்கள் அனைவருக்கும் உலகவங்கி மூலமாகவும் அந்த அந்த நாட்டின் மூலமாகவும் பெரும் அளவு நிதி EV electrical vehicles உற்பத்தி சார்ந்த ஆராய்ச்சிக்கு கொடுக்கபடுகிறது. இந்தியாவிலும் மோடி அரசு அப்படி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு 65% வரை நிதி மானியமாக கொடுக்க முன் வந்துள்ளது.
-அமேரிக்கா கடந்த ஆண்டு 5.7 லட்சம் மிம்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சீனா 6.5லட்சம் விற்பனை செய்துள்ளது ஐரோப்பிய தேசங்கள் 6.5லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளன, இதே சீனா 2013ல் வெறும் 28ஆயிரம் வாகனங்களை விற்று மந்தமாக இருந்து விட்டு இப்போ மிக அதிகமாக வேகம் காட்டுவது தெரியும். இது 2015ஆம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும் பொது மிக அதிகம் – அதுவே 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் மிகபெரிய அளவில் நாடுகள் தங்கள்வாகன பயன்பாட்டை முழுமையாக மாற்ற முயற்சிப்பது கண்கூடாக தெரிகிறது.
-மத்திய அமைச்சர் Piyush Goyalடெல்லியில் நடந்த CII Annual Session 2017 இறுதி நாளில் அறிவித்த அறிவிப்பு "இந்தியா 2030ஆம் ஆண்டில் ஒரு கார்கூட பெட்ரோல் டீசல் பயன்பாடு இருக்காது. அனைத்தையும் electrical vehicle என்று மாறி இருக்கும்" என்று தெளிவாக மோடி அரசின் கொள்கையை கூறிவிட்டார்.
நார்வே கடந்த 5ஆண்டுகளில் மட்டும் 34% வாகன பயன்பாட்டாளர்கள் இப்போது electrical vehicles பயன்பாடுக்கு மாறியுள்ளனர் என்று அறிக்கை தருகிறது. அனைத்து ஐரோப்பிய தேசங்களும் மிகவேகமாக மாறி வருகின்றன. 118% வளர்ச்சியில் பெஞ்சியம் போன்ற நாடுகள் இருக்க ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் 600% வரை தேவை அதிகம் ஆகியுள்ளன.
-அதிகரிக்கும் nitrogen oxide அளவின் காரணமாக காட்டி 2040 முன்பே எவ்வளவு வேகமாக டீசல் பெட்ரோல் வாகன பயன்பாட்டை தடை செய்ய வேண்டுமோ அவ்வளவு வேகமாக தடை செய்ய முயற்சிப்போம் என்று பிரிட்டன் கடந்த ஜீலை மாதம் அறிவித்துள்ளது. அப்படியே செப்டம்பர் மாதம் சீனாவின் அறிவிப்பை கொஞ்சம் படிக்கவும்.
-ஸ்காட்லாந்து கடந்த 4ஆம் தேதி அமைச்சர் Nicola Sturgeon அறிவிப்பு " 2032ல் முழுமையாக பெட்ரோல் டீசல் கார்கள் விற்பனை தடைசெய்யபடும்" என்று.
-ஒவ்வொரு 10கிலோமீட்டர் இடைவெளியில் electric vehicle charging station என்று அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் நாடுகள்? Lithium ion batteries மீதான ஆய்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளது. இதுலாம் எதனால்?
இப்படி அறிவித்த அனைத்து நாடுகளிலும் நன்குதேடி பார்க்கவும் பெட்ரோல் விலை நிச்சயம் குறைவாக இருக்காது. அது ஏன் என்பது உங்களால் யூகிக்க முடிகிறதா??
சரி அடுத்து இன்னொரு விவரம்
இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம் பெரும் அளவு பரவிஇருப்பது மூல காரணம் யார் என்று தேடினால் அனைத்தும் நேரடியாக கை காட்ட போவது இந்த அரபு தேசங்கள்தான்.
1960களுக்கு முன் எப்போவது நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஜிகாத் போராளிகள் குண்டுவைத்து மக்களை கொலை செய்தனர் , அங்கெ குண்டுவந்தனர், இங்கே ரயிலில் குண்டு வெடிப்பு , தீவிராவதிகள் தாக்குதலில் சில நூறு மக்கள் கொல்லபட்டனர் என்று கேள்விபட்டது உண்டா?? கிடையாது.
ஆனால்எ ன்று சவூதி அரபியா கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஆகி உலகம் முழுவதும் கடந்த 40வருடத்தில் வேகமாக வாகனபயன்பாடு என்பது முழுக்க முழுக்க இந்த பெட்ரோல் டீசல் சார்ந்து மாறியதோ அன்று முதல் இந்த அரபு தேசங்கள் செல்வம் கொட்டதொடங்கியது.
1965ல் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு opec உருவான பின் மெல்லமெல்ல விலை ஏற்றம் ஆரம்பம் ஆனது. 1998ல் ஒரு பேரல்(159 litres) வெறும் 17$க்கு விற்ற இந்த குருடாயில் 2008ல் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் 158$க்கு ஏற்ற அளவுக்கு விலை உயர்வு செய்து பெட்ரோலியம் கிடைக்காத நாடுகளின் ரத்தம் உறிஞ்சும் வேலையில் இறங்கியது இந்த opecநாடுகள்.
இந்த காலகட்டத்தில் சவூதி அரபிய போன்றநாடுகள் வந்த பணத்தை கொண்டு மதம் பரப்புகிறேன் – சவூதி அரபிய கலாச்சாரத்தை இஸ்லாமிய கலாசாரமாக கொண்டு சேர்ப்பேன் என்று வகாபிசம் உலகம் முழுவதும் சென்று பல ஆயிரம் கோடிகளை ஒவ்வொரு தேசத்திலும் வழங்கியது.
அதன் பெரும் ராட்சத வெளிபாடு தான் கடந்த 20வருடங்களில் உலகம் முழுவதும் வளர்ந்துநிற்கும் தீவிரவாதம். அமெரிக்கவின் 9/11க்கு பின் மட்டும் ஏறக்குறைய 32,000 மக்கள் உலகளவில் இந்த தீவிரவாதம் மூலம் கொலை செய்யபட்டுள்ளார்கள். சில லட்சம் பேர் ஊனம் ஆகிப்போனார்கள்.. சிரியா போன்ற நாடுகள் இஸ்லாமிய அகதிகளாக வந்த மக்களுக்கு என்ன உதவி செய்தது இந்த சவூதி ????? ஆனால் வகாபிசம் பரப்ப ஏன் பலஆயிரம் கோடிகளை ஆஸ்த்ரேலியாவில் கொட்ட துடிக்கிறது??? அநாதை ஆக நிற்கும் இஸ்லாமிய மக்களுக்கு கொடுக்கப்படாத பணம் – சோமாலியா 99%இஸ்லாமியர்கள் வாழும் நாடுதான் அங்கே பட்டினி சாவுகள் பல லட்சம் நடக்கும் போது என்ன உதவியை செய்தது இந்த அரபு நாடுகள்??? ஆனால் மதம் மாற்ற மட்டும் காசுகள் அள்ளி எறிவது எதனால்??? மிககேடுகெட்ட நாடுகள் உலகத்தில் இருக்கும் என்றால் அது இந்த சவூதி கத்தார் போன்ற நாடுகள்தான். கொஞ்சம் கூட மூளை இல்லாத உழைக்க வக்கு இல்லாத நாடுகளுக்கு காசு வந்தால் என்ன செய்யும்??? {சவுதியை பேசினால் மதம் கொண்டு ஆதரவு தெரிவிக்கவரும் மனிதர்கள் கொஞ்சமாது சிந்திக்க வேண்டும் இந்த நாட்டின் முகத்தை. இஸ்லாமியம் முன் வைத்து உலக அரசியல் செய்ய பார்க்கிறது சவுதி.}
இதன் தீர்வு என்று என்ன தேடுவது??? சவூதி அரபியசெல்வந்தர்கள் அமெரிக்க நாட்டின் மீது மட்டும் அல்ல அனைத்து நாடுகளிலும் முதலீடு செய்துள்ளனர். அவர்களை அவ்வளவு எளிதில் வீழ்த்த தடையாக இருப்பது இந்த முதலீடுகள். எனவே முதலில் இந்த நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியை உருவாக்க உலகநாடுகள் முயற்சிக்கின்றன. இதனால் தான் ரஷ்யாவும் , அமெரிக்காவும் தங்களிடம் உள்ள எண்ணெய் வளத்தை எடுத்து ஏற்றுமதி செய்ய முழுமையாக அனுமதி அளித்து விட்டான. அதுதான் முதல் காரணம் இந்த அளவு கட்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு.. அடுத்து நாடுகள் முக்கியமாக் திவிராவத தாக்குதல் அதிகம் உள்ள நாடுகள் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளன.
எண்ணெய் தேவையை சார்ந்து இருக்கும் வரை இந்த சவூதி அரபியாவை வீழ்த்த முடியாது. எனவே முக்கிய வாகன போக்குவரத்தை முழுமையாக மாற்றிவிட வேகம் காட்டுகின்றன.
ஆக இரண்டு மிக பெரிய காரணம்
1.வளர்ந்து வரும் தீவிரவாதம் தூண்டும் நாடுகளான அரபு நாடுகள் ஒடுக்கபட வேண்டும்.
2.நகரங்கள் மக்கள் வாழும் சூழலை வேகமாக இழந்துவர காரணம் இந்தவாகன எரிபொருள் பயன்பாடுதான். இதை இப்படியே விட்டால் உலகம் வளிமண்டலம் பெரும்நாசம் ஆவதை தடுக்க முடியாது.
இந்த இரண்டு காரணம்தான் முக்கியம் எந்த நாடுகளும் விலை குறைப்புக்கு முன் வராமல் இருக்க. அது ஏன் விலை குறைப்பு செய்தால் என்ன ஆகும்?
விலை குறைப்பு செய்வதால் மக்கள் விரும்பும் வாகன பயன்பாடாக டீசல் பெட்ரோல் வாகனங்கள் இருக்குமே தவிர புதிதாக சந்தைக்கு வரும் இந்த எலட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு இருக்காது. இது சந்தையை கண்காணிக்கும் யாருக்கும் தெரியும்.
ஒரு பொருள் வரவேற்பு இருக்கும் என்றால் அங்கே சந்தை ஆராய்சிகளும் , புதிய புதிய கண்டுபிடிப்புகளும் அதனை தொடர்ந்து வரும். அப்படி ஒரு போட்டி உருவாகாத நிலையில் எந்த கண்டுபிடிப்பும் இல்லை எந்த புதிய முயற்சியும் தோல்வி அடையும். முதலில் 2006களில் செல் போன் 8000ரூபாய்க்கு வாங்கினால் என்ன இருக்கும்??? பின்னர் எப்படி வேகமாக மாறி இன்று இந்த அளவு முன்னேற சந்தை போட்டி தான் காரணம்.
எனவே இப்படி பெட்ரோல் விலை குறைவதால் நிச்சயம் மக்கள் மத்தியில் மாற்று எரிபொருள் தேவைக்கு எந்த சிந்தனையும் வராது. Lithium ion batteries ஆராய்சியின் வெற்றியில் ஒருவேளை மக்களால் எலக்ரிக் கார்கள் மூலம் 100ரூபாய்க்கு சென்னை வரை செல்ல முடியும் என்று இருந்தால் தற்போது 1000ரூபாய் செலவுசெய்யும் டீசல் கார்களைவிட புதிய வரவாக வரும் எலக்ரிக் வாகனத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் உருவாகும். இது மக்களை மாற்று வாகன பயன் பாட்டை நோக்கி நகர்த்தும்.
ஆனால் இப்படி விலை குறைந்தால் நிச்சயம் மக்களுக்கு மாற்று எண்ணம் உருவாகவே ஆகாது. இதுநேரடியாக நாட்டின் கொள்கை முடிவை முயற்சியை பாதிக்கும். 2030அல்ல 3030வந்தாலும் மக்கள் மாறமாட்டார்கள். இவர்கள் என்ன கடந்த 40வருடமாக தானே இந்த அளவு மாறினார்கள்? எனவே அடுத்த 20வருடத்தில் தவறை சரி செய்து மாற்ற வேண்டும்.
இறுதியாக :
சராசரியாக இந்தியா மாதம் 17 TONNE Millionஅளவு ஆயில் இறக்குமதி செய்கிறது. ஒரு டன் என்றால் 7 பேரல். 17000000 * 7 என்று போட்டு அதை இன்றைய குரூடாயில் விலையுடன் பெருக்கவும்… 595,00,00,000டாலர் மதிப்பில் இறக்குமதி செய்கிறோம் அதுவும் மாதம் மாதம். கிடைக்காத தண்ணியை நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்து நாம் ஏறக்குறைய 4000லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி ஏற்றுமதி செய்யும் ஒரு கிலோ அரிசியை – அவன் ஒரு லிட்டர் கொடுத்து வாங்கிவிடுவான் என்றால் யார் முட்டாள்??? 5000 லிட்டர் தண்ணீரை வெறும் 1லிட்டர் என்னைய்க்கு விற்கும் தேவை எதனால் உருவாகிறது என்று கொஞ்சம் யோசிக்கவும். மாற்று எரிபொருளின் தேவை புரியும்.
நாடு இப்படி இருந்தால் உருப்படுமா??? இந்த லட்சணத்தில் பெட்ரோல் போட்டு போய் கதிராமங்கலம் போராட்டம் நடத்தும் போராளிகளை என்ன சொல்ல??? ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலை என்று கூறும் அரசியல் கட்சி தலைவர்களை ஆகா ஓகோ என்று ரட்சிக்க வந்த மகான் என்று நம்பும் முட்டாள்கள்- தமிழை கீழ்தரமாக விமர்சித்தவன் பெயரில் ஊர் ஊருக்கு பஸ் நிலையங்கள் வைத்து விட்டு பிஜேபிகாரன் கருப்பு என்று சொன்னதற்கு ஆச்சு பூச்சுன்னு கத்தின திராவிட முட்டாள்கள் ஒருபக்கம்- இஸ்ரோ ராக்கெட் விடுவதால் ஏழைக்கு என்ன கிடைக்கும் என்று பேசும் அறிவியல் மேதை நடிகர் சிவகுமார் போல நடிகர்கள் கருத்தை எல்லாம் நம்பும் கவர்ச்சி முட்டாள்கள் கூட்டம் ஒருபக்கம் என்று இருக்கும் தமிழகத்தில் உண்மையை கொண்டு சேர்ப்பதில் கொஞ்சம் கடினமாக தான் இருக்கு.
என்னால் முடிந்தவரை விளக்கிவிட்டேன். கொஞ்சம் கடினம் என்றாலும் நல்ல எதிர்காலம் கருத்தில்கொண்டு நாம் ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாட்டில் மாற்றம் என்பது ஆட்சியாளர்கள் கொள்கை முடிவிலும் அதை மக்கள் புரிந்து ஒத்துழைப்பதில் மட்டுமே நடக்கும். பின்னர் மாற்றம் எப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர் என்று எனக்கு புரியவில்லை.
ஹிந்து வெறுப்பு ; பிஜேபி வெறுப்பில் மதம் மாற்றும் கூட்டங்கள் போடும் மிமீஸ் எல்லாம் நம்பினால் என்ன சொல்ல?
ஒன்றை நன்கு புரிந்து கொள். மோடியை எதிர்க்க இங்கே காரணம் நான் சொல்லி தெரிய தேவை இல்லை. இங்கே கூச்சல் போடும் மோடியை கிடக்கும் வாய்ப்பில் எல்லாம் திட்டி தீர்க்கும் இந்த கூட்டம் எதுவும் நாட்டின் நலன் கருதி இதை செய்யவில்லை. அவர்கள் சொந்த காரணமும் மதம் சார்ந்த காரணமும் தான் ஒழிய நியாயமான காரணம் எதுவும் இல்லை
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.