பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அத்வானி, உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் அனைத்து மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 3 மாநில தலைவர்கள் பேச அனுமதிக்கப் பட்டனர். அதில் தமிழிசையும் ஒருவர். அவர் பேசும்போது, மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி திட்டத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடுசெய்த பிரதமர் மோடிதான் உண்மையான மீனவ நண்பன் என்று குறிப்பிட்டார்.
தமிழிசை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கீழடி அகழாய்வு பணிகள்குறித்து ஆதாரமில்லாத அவதூறுகளை மத்திய அரசுக்கு எதிராக கூறிவரும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள், சுப வீ. ராமதாஸ் ஆகியோரின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது.
கீழடியில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்தஅகழாய்வில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொடக்க காலத்தை சேர்ந்த செங்கற்கள் கட்டிடங்கள் உள்ளிட்ட 5300 தொல்லியல் பொருட் கள்கிடைத்தன. இவை அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
செப்டம்பர் 30-ந்தேதி 3-ம் கட்டப் பணிகள் நிறைவடையும், இதை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல 4-ம் கட்ட அகழாய்வு திட்ட பணிக்களுக்கான முன்வரைவு தமிழகதொல்லியல் துறை மூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு மத்திய தொல்லியல் ஆலோசனை குழுவுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ள நிலையில் வழக்கம்போல் நம்மூர் அரசியல்வாதிகள் இதில் ஏதோ மத்திய அரசின் சதி என்று பொய்யுரை பரப்பி வருகிறார்கள். இதுவன்மையாக கண்டிக்கத்தக்கது.
2-ம் கட்ட ஆய்வு நடந்த நிலையில் வெறும் அறிக்கைவிட்டு எல்லாம் தன்னால்தான் வந்தது என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக தலைவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சிக்கு மைய அரசு வேண்டிய பணிகளை வரும் நாட்களிலும் செய்துமுடிக்கும் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.