காஷ்மீரில், மத்திய அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காதபகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜ., கூட்டணிஆட்சி நடக்கிறது. எம்.பி.,க்கள், தங்கள் சொந்ததொகுதியில், ஒருகிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும், 'சன்சத் ஆதர்ஷ்கிராம்' திட்டத்தை, 2014ல், பிரதமர் மோடி துவங்கினார்.
இதன்படி, ஜம்மு – காஷ்மீரில்தான், எம்.பி.,யாக தேர்வுசெய்யப்பட்ட, உதாம்பூர் தொகுதிக்கு உட்பட்ட, அம்பாலா கிராமத்தை, மத்திய இணை அமைச்சர், ஜிதேந்திரசிங் தத்தெடுத்தார்.அங்கு, மத்திய, மாநில அரசு துறைகளின் சார்பில், பல்வேறுதிட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து, ஜிதேந்திர சிங் கூறியதாவது: அம்பாலா கிராமம், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அறிவிக்கப் படுகிறது. அம்பாலா கிராமத்தில் வங்கி, ஏ.டி.எம்., மையம், பொதுசுகாதார மையம், மேல்நிலைப் பள்ளி, விளையாட்டு மைதானம், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும். இதேபோல், திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத மாநிலம் என்ற சாதனையை, ஜம்முகாஷ்மீர் விரைவில் படைக்கும்.
தேவிகாநதியை துாய்மைப்படுத்துவது; 3,500 கோடி ரூபாயில், சட்டர்லேகா சுரங்கப்பாதை; உதம்பூரில் உயிர் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை, பிரதமர் மோடி வழங்கிஉள்ளார். மாநிலமக்கள், மத்திய அரசுக்கு, மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.