ஒரு பக்கம் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பற்றிய சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்க, இந்த அவதியான சூழ்நிலையிலும் தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர், கீழடி அகழ்வாராய்ச்சி சம்பந்தமாக விடாப்பிடியாகப் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதுவும் பேட்டி என்றால் சுத்தமான நயம் திராவிட இனச் சார்பு நிலையிலிருந்து பேசுகின்றனர்.
முதலாவது கட்ட கீழடி ஆய்வு முடிக்கப்பட்ட போதே, ‘டெல்லியிலுள்ள பா.ஜ.க. அரசு, திராவிடர்களின் தொன்மையும், நாகரிகமும் எங்கே வெளியுலகிற்குத் தெரிந்து விடுமோ என்று அவசர அவசரமாக, அரைகுறையாக ஆய்வை முடித்து விட்டது’ என்று தமிழகத் தலைவர்கள் ஏகோபித்த குரலில் குற்றம் சாட்டினர்.
பிறகு, கீழடியில் கிடைத்த பொருட்களை தொல்பொருளாய்வு நிறுவனம் வடக்கே டெல்லிக்கு எடுத்துச் செல்லப் போகிறது என்ற பேச்சு அடிபட்ட போதும், திராவிட நாகரிகத்தை பா.ஜ.க.வின் காவி அரசு குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கிறது. அதனால்தான் தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை டெல்லிக்கு எடுத்துச் செல்கிறது என்று தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இப்போது சில தினங்களுக்கு முன்பு, தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அகழ்வு செய்த மூன்றாவது கட்டப் பணிகளில், எந்தத் தொல்பொருட்களும் கிடைக்காததால் மூன்றாவது கட்ட அகழ்வை மூடிவிட்டது. இதுதான் உண்மை.
இதுபற்றிச் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான முத்தரசன், திராவிட இனத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது போல் பேசியுள்ளார்.
ஏறத்தாழ இதே கருத்தை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான ராமகிருஷ்ணனும், ‘ஹிந்துத்துவத்துக்கு எதிரானது என்பதால் மூடிவிட்டனர்’ என்று கூறியுள்ளார்.
பொதுவாக அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே தேசிய அளவிலான பார்வைகளைக் கொண்ட தேசியக் கட்சிகளாக இருந்தன.
மாநிலப் பிரச்னைகளைப் பற்றிப் பேசினாலும் அவர்கள் வாயிலிருந்து திராவிடம், திராவிட இனம் என்ற சொற்கள் முன்பெல்லாம் வெளிவராது.
திராவிடம் – திராவிட இனம் என்ற பார்வைகள் எல்லாம் தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற பல்வேறு திராவிடக் கட்சிகளுக்கு உரித்தானவை, சொந்தமானவை.
ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களெல்லாம் திராவிட நாட்டுக்கும், திராவிடம் என்ற சொல்லாடலுக்கும் எதிரானவர்கள். அவர்கள் திராவிடத்தை ஆதரித்ததே இல்லை. இதுதான் முன்பு கம்யூனிஸ்ட்களின் நிலை.
ஆனால், இந்தக் கீழடி அகழ்வாராய்ச்சி விஷயத்தில், தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிக்காக கோஷ்டி கானம் பாடிப் பாடி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் ஸ்டாலின், வைகோபோல் பேச ஆரம்பித்து விட்டனர். சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்தால் இப்படித்தான்.
பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலைச் செய்யட்டும். ஆனால், இந்தக் கீழடி அகழ்வாராய்ச்சி விஷயத்தில் ‘திராவிட இனத்தின் தொன்மங்களை மறைக்கும் காவி அரசியல்’ எங்கேவந்தது?
தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் என்ன சங்க்பரிவாரத்தின் அமைப்பா? அது ஒரு அரசு நிறுவனம். இதில் ஹிந்துத்துவாவுக்கு என்ன சம்பந்தம்? இல்லை பாஜக.வா தொல்பொருள் ஆய்வு அமைப்பைப் பின்னின்று இயக்குகிறது?
ஸ்டாலின், வைகோ போன்றவர்கள் அணிந்துள்ள, கண்மூடித் தனமான பா.ஜ.க. எதிர்ப்புக் கண்ணாடியையே முத்தரசன் போன்றவர்களும் அணிந்துள்ளதால், கீழடி அகழ்வாய்வு கூட காவிமயமாகத் தெரிகிறது. இந்தக் கம்யூனிஸ்ட்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
திராவிடக் கட்சிகளுடன் நாலைந்தாறு ஸீட்களுக்காகக் கூட்டணி வைத்து வைத்தே, திராவிட எதிர்ப்பு என்ற தங்களுடைய தனித்துவத்தைக் கம்யூனிஸ்ட்கள் இழந்து வெகுகாலமாகி விட்டது. அதன் வெளிப்பாடுதான் இது.
நன்றி துக்ளக்
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.