பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இந்தியா தொழில்செய்ய மிகவும் சிறந்த நாடாக மாறியுள்ளது என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். இதுதொடர்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற தொழில்தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தொழில்செய்வதற்கு உகந்த நாடுகளின் தரவரிசை பட்டியலை உலகவங்கி கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.
அதில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி உள்ளது. மோடி தலைமையில் தொழில்செய்ய சிறந்த நாடாக இந்தியா மாறியுள்ளதை இது எடுத்து காட்டுகிறது. கடந்தஆண்டு மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டுவாபஸ் நடவடிக்கை, ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு எலக்ட்ரானிக் பணபரிவர்த்தனையில் மிகப் பெரிய அளவில ்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதைதொடர்ந்து பல்வேறு வரிவிதிப்புக்கு பதிலாக ஒரே சீரான வரியை விதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி அமல் படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் மூலமாக நடை பெறும் பணப் பரிவர்த்தனைகளும் அதிகரித்து வருகின்றன. அமைப்புசார்ந்த மற்றும் சாராத தொழில்துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. வரிவிதிப்பு முறையில் அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியபொருளாதாரம் நீண்ட காலப்பலன்களை அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு ஜெட்லி பேசினார்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.