51 அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு : மத்திய அரசு நடவடிக்கை

புற்றுநோய், வலி, இதயபாதிப்புகள், தோல்நோய்கள் உள்ளிட்ட வற்றுக்கான 51 அத்தியாவசிய மருந்துகள் மீது தேசிய மருந்துவிலை நிர்ணய ஆணையம் (என்.பி.பி.ஏ) விலை கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி அந்தமருந்துகளின் விலை 6 சதவீதத்தில் இருந்து 53 சதவீதம் வரை குறைகின்றன.


இதுதொடர்பாக என்பிபிஏ அமைப்பு வெள்ளிக் கிழமை வெளியிட்ட தனித் தனி அறிவிக்கைகளில் 13 அத்தியாவசிய மருந்துகள் மீது விலை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதேசமயம், 15 மருந்துகள் மீதான விலைக்கட்டுப்பாடு மாற்றியமைக்கப் பட்டுள்ளது.


மேலும், 23 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மருந்துகளில் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்ஸாலிபிளாட்டின் (100 மி.கி. ஊசி), ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கான தடுப்பு மருந்து, தட்டம்மை தடுப்பு மருந்து ஆகியவையும் அடங்கும்.


மறுபுறம், அறுவை சிகிச்சையின்போது பயன் படுத்தப்படும் மயக்க மருந்து, வைட்டமின் கே, காச நோய் தடுப்புக்கான பிசிஜி மருந்து விலைக் கட்டுப்பாட்டு விகிதங்கள் மாற்றியமைக்க பட்டுள்ளன.


கடந்த 2013-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மருந்து விலைகள் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் இந்த விலை கட்டுப்பாடுகளை என்பிபிஏ அறிவித்துள்ளது. விலைக் கட்டுப்பாட்டின் கீழ் வராத மருந்துகளைப் பொறுத்த வரை, உற்பத்தியாளர்கள் அவற்றின் அதிகபட்ச சில்லறை விலையை ஆண்டுக்கு 10 சதவீதம் வரை அதிகரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


கடந்த 1997-இல் அமைக்கப்பட்ட என்பிபிஏ அமைப்புக்கு மருந்துப் பொருள்களின் விலைகளை நிர்ணயித்தல், கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத மருந்துகளின் விலைகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...