மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பொதுத் துறை வங்கிகளில் பலகோடி ரூபாய் கடன்பெற்ற பெரிய நிறுவனங்களின் வராக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. இது திட்டமிட்டவதந்தி ஆகும். இதில் துளியும் உண்மை கிடையாது.
இதற்கு முன்பு மத்திய அரசில் இருந்தகாங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் 2008–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை பெரிய நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க எந்த நடவடிக்கையும் அந்த அரசு எடுக்கவில்லை. அவ்வாறு வதந்தி பரப்பு வோரிடம் யாருடைய உத்தரவின் பேரில் கடன்தள்ளுபடி செய்யப்படுகிறது என மக்கள் கேள்வி எழுப்பவேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் பெரிய நிறுவனங்களுக்கு எப்படி கடன் வழங்கப்பட்டது? அதை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் மக்கள் கேட்கவேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த மத்திய பா.ஜனதா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வங்கிகளுக்கு கூடுதல் நிதி அளிக்க முடிவுசெய்து உள்ளது. வங்கிகளில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் படுகிறது. மேலும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து வராக் கடன்களை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.