குமரிமாவட்டத்தில் நேற்று சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்ததால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைபட்டது. இதனால் மாவட்டத்தில் பெரும்சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சேதம் அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில்சென்று பார்வையிட்டார். நாகர்கோவிலில் இருந்து காரில்புறப்பட்ட அவர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது பார்வதிபுரம், சுங்கான்கடை பகுதியில் சாலையில் விழுந்துகிடந்த மரத்தை உடனே வெட்டி அகற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார்.
சில இடங்களில் மரங்களை அகற்றும் பணி நடந்தது. அந்தபணிகளை ஆய்வு செய்தவர் பணிகளை விரைந்து முடிக்கும்படி வலியுறுத்தினார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகளும் சென்றனர்
இதனைதொடர்ந்து தென் மாவட்டங்களில் போதியஅளவில் மீட்புகுழுக்களை அனுப்பிவைக்குமாறு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜுவிடம் கூறினார். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்தபகுதிகளை பற்றியும் விளக்கினார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து , கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்று ஓகி புயலினால் சிக்குண்டு கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களை காக்கவும், போர்கால நடவடிக்கையில் மீட்புப்பணியில் ஈடுபட போதியளவு மீட்புக்கப்பல், கப்பற்படை வீரர்கள் மற்றும் விமானப் படையை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தினார்.அதற்குபதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக வேண்டிய உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.