புல்லட் ரயில்திட்டத்தை எதிர்ப்பவர்கள், மாட்டு வண்டியில் செல்லலாம்

குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய்ரூபானி முதல்வராக உள்ளார். இம்மாநில சட்ட சபைக்கு, வரும், 9, 14ம் தேதிகளில், இருகட்டங்களாக சட்ட சபைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலையொட்டி, குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில், பிரதமர் நரேந்திரமோடி, 48 மணி நேர சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில், மோடி பேசியதாவது: காங்., கட்சி, நாட்டுமக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த கட்சியை, தேசிய அரசியலில்இருந்து துடைத்தெறிவேன்.ஆமதாபாத் – மும்பை நகரங்களை இணைக்கும் வகையில், 1.1 லட்சம் கோடி ரூபாய்செலவில், புல்லட் ரயில்திட்டம் நிறைவேற்றப் படுவதற்கு, காங்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதே திட்டத்தை நிறைவேற்ற, காங்.,கும் முயற்சித்தது. ஆனால், தோல்வி அடைந்ததால், தற்போது, எதிர்ப்புதெரிவித்து வருகிறது. புல்லட் ரயில்திட்டத்தை எதிர்ப்பவர்கள், மாட்டு வண்டியில் செல்லலாம். அது பற்றி எனக்கு கவலை இல்லை. புல்லட் ரயில் திட்டத்தால், குஜராத்தில், பெரியளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவைப்படும், சிமென்ட், இரும்புபோன்ற பொருட்கள், இந்தியாவில் இருந்து வாங்கப்படும். இந்ததிட்டத்தை நிறைவேற்றும் பணியில், இந்திய தொழிலாளர்கள் ஈடுபடுவர். இதனால்,சிமென்ட், இரும்பு போன்றவற்றை, இந்தியாவிடம் இருந்து, ஜப்பான்வாங்கும்; இது, இந்தியாவுக்கு பெரியலாபம் இல்லையா?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக, காங்., தலைவர்கள் கூறிக் கொள்கின்றனர். குஜராத்  நன்மைக்கு, அவர்கள் என்னசெய்தனர்.தாங்கள் ஆட்சியில் இருந்தசமயத்தில்,கிராமங்களையும், நகரங்களையும், மாநிலங்களையும்,மக்களையும் பிரித்ததைதவிர, காங்., தலைவர்கள் எதுவும் செய்ய வில்லை. மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. குஜராத்முதல்வராக நான் இருந்தபோது, குஜராத்துக்கு எதிராக, காங்., தலைவர்கள் பாயாத நாளே இல்லை.

குஜராத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள, கட்ச், பரூச் மாவட்டங்கள், பா.ஜ., ஆட்சியில் அதிகளவுவளர்ச்சி அடைந்துள்ளன.சர்தார் வல்ல பாய் படேல் சிலை, உலகின் மிக உயரமான சிலையாக நிறுவப் படுகிறது. ஒருமைப்பாட்டு சிலையாக கருதப்படும் இது, எண்ணற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணியரை ஈர்க்கும்.

குஜராத்தின் கடல் எல்லையில் உள்ள, 1,300 சிறுதீவுகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இவற்றில் பல தீவுகள், சிங்கப்பூரை விட பெரியவை. இந்த தீவுகள், சிங்கப்பூரை போன்று வளர்ச்சி பெறுவதை கற்பனை செய்துபாருங்கள். எனவே, பரூச்பகுதிக்கு, சிறப்பான எதிர்காலம் ஏற்பட, பா.ஜ.க,வுக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர்
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...