தமிழகத்திலும் பா.ஜனதா தனது அங்கீகாரத்தை பெறும்

தமிழக பா.ஜனதா தலைவர்  தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரியில் புயல், வெள்ளம் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக அதற்கான மீட்பு நடவடிக்கையில் மத்திய அரசு உதவிசெய்து உள்ளது. துணை ராணுவம், கப்பல்கள், ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது.

புயலில் சிக்கி யாரெல்லாம் காணாமல்போய் உள்ளார்கள் என்ற விவரத்தை அரசு தெளிவாக கூறவேண்டும். மழை வெள்ளத்தில் அரசியல் செய்யக் கூடாது. தமிழக அரசு இன்னும் முன்னெச்சரிக்கையோடு இருந்து இருக்கவேண்டும். மக்களின் துன்பத்தில் உடனடியாக பங்கு கொள்வதற்காக பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு என்னென்ன உதவி தேவையோ, அதனை செய்வோம் என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே ஆக்கப் பூர்வமான அரசியல் செய்துவரும் கட்சி பா.ஜனதா. ஆர்கே.நகர் தேர்தலில் வைகோ, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். திராவிட கட்சிகளை அழித்து இந்துத்துவா சக்திகள் மேலோங்கி விடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆர்கே.நகரில் கூட்டணி வைக்கிறார்களாம்.

அவர்கள் கூட்டணி வைப்பது என்றால் வைத்து கொள்ளட்டும். அதற்குகாரணம் தேட முடியவில்லை என்றால் எங்கள் சுயநலத்துக்காக கூட்டணி வைத்துள்ளோம் என்று கூட சொல்லட்டும். ஆனால் அவர்கள் விருப்பப்படி கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்கள் இருவரும் துரோகிகள் என்று குற்றம் சாட்டியதை எல்லாம் மறந்து, அவர்கள் கூட்டணிவைத்து உள்ளனர். இன்று அவர்கள் கூட்டணி வைப்பதற்கு காரணம் பா.ஜனதா என்று சொல்கிறார்கள். இது தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

பா.ஜ.,கட்சியின் தற்போதைய பணி வேலையேசெய்யாத ராகுலை வேலைசெய்ய வைப்பதும், சுறுசுறுப்பே இல்லாத ராகுல் போன்றவர்களை சுறுசுறுப்படைய செய்வதும், கூட்டணிபற்றி சிந்திக்காத வைகோவை கூட்டணி வைக்கவைப்பதும் தானா?. பா.ஜனதா கட்சி நேர்மறையான அரசியலை செய்துகொண்டு இருக்கிறது. பா.ஜனதா கட்சியை பார்த்து பயப்பட வில்லை என்றால், ஏன் பா.ஜனதாவை எதிர்த்து கூட்டணி வைக்கிறேன் என்று கூற வேண்டும். எல்லோரின் மையப்புள்ளியாகவும் பா.ஜனதா கட்சி இருப்பதற்குகாரணம் என்ன?.

நீங்கள் எவ்வளவு தடுத்தாலும், தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்கமுடியாது என்பதை உணர்ந்து இருக்கிறீர்கள். எவ்வளவு தான் விமர்சனம் வைத்தாலும் 14 மாநகராட்சிகளை உத்தரபிரதேசத்தில் பிடித்து உள்ளது. தமிழகத்திலும் பா.ஜனதா தனது அங்கீகாரத்தை பெறும். அதற்காகத்தான் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறோம். நாங்கள் மக்களை நேர்முக அரசியலுக்காக, வளர்ச்சித் திட்டங்களுக்காக அணுகுகிறோம்.

பிரதமர் மோடி அனைத்து உதவியும் செய்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியிடம் கூறினார். அதன் பிறகு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கழித்து கடிதம் எழுதுகிறார். தமிழகமக்களிடம் தூரத்தில் இருந்தாலும் தொடர்புவைத்து இருப்பவர் மோடி. பக்கத்தில் இருந்தாலும் 2 நாள் கழித்துதான் கடிதம் எழுதவே தோன்றுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். ஏனென்றால் இன்று இந்தகட்சிகளை நம்பி மக்கள் ஏமாந்தது போதும். தேசியகட்சியான பா.ஜனதாவை நம்பி அவர்கள் ஆதரவை தர காத்திருக் கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...