அயோத்தி ராமர்கோயில் தொடர்பான வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து வழக்கு விசாரணை அவ்வப்போது நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்தவழக்கில் ராமர்கோயில் எழுப்பக்கூடாது என்று சுன்னி வக்புவாரிய அமைப்பின் சார்பாக காங்கிரஸ் முக்கியத்தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபில் ஆஜராகி வாதாடிவருகிறார்.
இவ்விவகாரம் தொடர்பான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்றது. அப்போது, அயோத்தி வழக்கு விசாரணையை வருகிற 2019-ம் ஆண்டு ஜுலை மாதம்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கபில் சிபில் தெரிவித்தார்.
ஆனால், இதனை மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வருகிற பிப்ரவரி 8-ந் தேதி இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
இதனிடையே குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, தண்டுகா என்ற இடத்தில் புதன்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தின் போது இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
உச்ச நீதி மன்றத்தில் அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் முக்கியதலைவரக்ளில் ஒருவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபில், இந்தவழக்கினை 2019 வரை ஒத்திவைக்குமாறு அங்கு கோயில் எழுப்ப எதிர்ப்பு தெரிவித்துவரும் அமைப்பின் சார்பாக ஆஜராகி வாதாடியுள்ளார்.
ஒரு வழக்கறிஞராக அவர் எந்த வழக்கிலும் ஆஜராகும் உரிமை உள்ளது. ஆனால், முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் என்ற முறையில் அவருக்கு சிலபொறுப்புணர்வு உள்ளது. 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேடவிரும்புகிறது. அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தைவிட தங்களின் வளர்ச்சியில்தான் அதிக அக்கறை உள்ளது. சமீப காலங்களில் கோயில்களுக்கு யாத்திரை செல்லும் ராகுல், இந்தவிவகாரத்தில் அவருடைய கருத்தினை தெரிவிக்கவேண்டும். அவரின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.