சுஷ்மா சுவராஜுடன் குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் சந்திப்பு

பாகிஸ்தானில் மரணதண்டனை கைதியாக இருக்கும் குல்பூஷன் ஜாதவ் பெரும்போராட்டத்திற்கு பின் தன் குடும்பத்தினரை நேற்று சந்தித்தார். இந்தசந்திப்பிற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் பெரிதும் முயற்சி எடுத்தார். இந்தநிலையில் இந்தசந்திப்பு முடிந்த பின் இன்று குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் இன்று சுஷ்மா சுவராஜை சந்தித்தனர். இந்தசந்திப்பிற்கு முயற்சி செய்ததற்காக ஜாதவ் குடும்பத்தினர் சுஷ்மாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

பெரும்பாதுகாப்பிற்கு மத்தியிலேயே ஜாதவ் குடும்பத்தினர் பாகிஸ் தானில் ஜாதவை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் இருந்தபோது உளவு பார்த்ததாக கைது செய்யப் பட்டார். மேலும் இந்தியரான இவர் ஈராக்கில் இருந்துவந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா இந்தசெய்தியை மறுத்தது. அவர் ஈராக்கில் வியாபாரம் செய்ததாகவும், அவரை நாடு கடத்தி விட்டதாகவும் இந்தியா கூறியது.
 
இவர் உளவு பார்த்தாககூறி அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டார். இந்நிலையில் அவருக்கு மரண தண்டனைவிதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்புவழங்கியது. இந்தியாவின் கடும் முயற்சிக்கு பின் சர்வதேசநீதிமன்றம் இந்த தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவுபிறப்பித்தது.
 
இதையடுத்து ஜாதவ் அவரது குடும்பத்தினரை பார்க்க அனுமதிக்கப் பட்டார். நேற்று பாகிஸ்தான் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் அவரைசந்தித்தனர். ஆனால் இவர் கண்ணாடிக்கு பின்பக்கமும், அவரது குடும்பம் கண்ணாடிக்கு அடுத்த பக்கமும் உட்கார வைக்கப்பட்டனர்.
 

இந்தசந்திப்பு நிகழ்வதற்கு இந்திய வெளியுறவுத் துறை முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் இன்று சுஷ்மாவை சந்தித்தனர். இந்தசந்திப்பை ஏற்பாடு செய்ததற்காக சுஷ்மாவிற்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...