மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை கிண்டல் செய்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக மாநிலங்களவையில் பாஜக நேற்று உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவந்தது.
அவை விதி 187-ன் கீழ், பாஜக உறுப்பினர் புபேந்திரயாதவ் இத்தீர்மானத்தை கொண்டுவந்தார். மாநிலங்களவை பாஜக தலைவரான அருண் ஜேட்லியின் உரிமை மீறப்பட்டுள்ளதை அவைத்தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக புபேந்திர யாதவ் பேசும்போது, “இந்த அவை உறுப்பினர்களுக்கென்று தனிகவுரவம் உள்ளது. இந்த அவையின் புகழைகெடுக்கும் தீய நோக்கத்துடன் நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் பெயரை ராகுல் காந்தி பயன்படுத்தியுள்ளார். இதை உரிமைமீறலாக கருத நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதான குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்தவாரம் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மன்மோகன் சிங்கின் நாட்டுப்பற்றை பிரதமர் விமர்சிக்க வில்லை என அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.
இதையடுத்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நினைப்பது ஒன்று, பேசுவதுவேறு என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திய ஜேட்லிக்கு நன்றி” என பதிவிட்டார்.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.