வைரமுத்து அவர்களுக்கு, எனக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை. தமிழ் நிறைய பிடிக்கும். ஆனால் என் தமிழ் எனக்கு என் கடவுளை துதி செய்யவும் உதவும். உங்களுக்கு நிதி செய்ய மட்டும்.
.
சபை நாகரிகம் என்று ஒன்றுள்ளது அன்பரே. அது, சபையில் உள்ளோரை மட்டும் மரியாதை செய்ய வேண்டும் ,என்ற வரையறை இல்லை.இல்லாதவரையும் மதிக்க வேண்டும். அதுவே ஒரு ஆழ்வார் என மதித்து போற்றப்படும் தமிழர்களின் பெருமையாம் ஆண்டாளைப் பற்றி பேசும்போது? இன்னும் கவனம் வேண்டாமா? இல்லை இது கவன ஈர்ப்பு முயற்சியா?
.
"பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" என்று ஆண்டாளை குறிப்பிடும்பொது உங்கள் ஆணாதிக்க அரிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி உங்கள் "உயர்வு" இவ்வளவுதான் என்பதை தெளிவாக்கியதற்கு நன்றி.
.
உங்கள் தாயாரை யாருக்காவது அறிமுகம் செய்யும் போது "இவள் என் தகப்பனுக்கு முந்தி விரித்தவள்" என்பீரோ? எத்தனை இழிவான மன நிலை, உங்களுக்கு.
.
"திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்"
என்றான் வள்ளுவன். நீங்கள் இப்படி தரம் இழந்த சொல்லை சொல்லக் காரணம் என்னவோ?
.
"அமெரிக்காவின் indiana Universityயில்" என்று பயமுறுத்த வேண்டாம். எல்லாவற்றுக்கும் "american research" ஒரு முன்னோடி என்னும் slavery mind இன்னும் வைரமுத்துவுக்கு நீங்கவில்லை என்பது வியப்பொன்றும் இல்லை. நம் உயரம் என்ன என்று தெரிந்துகொள்ள ஒரு அமெரிக்க ஆராய்ச்சி தேவை இல்லை. இதை நான் ஒரு பக்தனாகவும், இந்தியனாகவும் சொல்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்வது போல் நீங்கள் ஒன்றும் "ஆணாதிக்க எதிர்ப்பாளர்" கிடையாது. வெறும் திராவிட கூலியே.
.
உங்களைப்போன்ற திராவிட கூலிகளுக்கு ஒரு சராசரி தமிழனுக்குரிய அளவு வீரம் இல்லை என்பது ஊரறிந்த ஒன்று. இங்கே அது மறுபடி நிரூபணம் ஆயிற்று. முடிந்தால், இவ்வளவு பேசும் நீங்கள் ஒரே ஒரு பகுத்தறிவு கேள்வியை மட்டும் டிசம்பர் மாதம் கடைசி வாரம் கேளுங்கள்.
.
நீங்கள் பீற்றிக்கொள்ளும் "சமய சமூக மறுப்பாளர்" பட்டம் துவைத்து எடுக்கப்படும்.
உங்கள் பகுத்தறிவுவாத "டப்பா" dance ஆடும்.
.
நா காக்க
நன்றி :-
சமூக ஊடகத்தில் இருந்து எடுக்கப்ப்பட்டது
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.