தொலைதூர உணர்திறன் செயற்கைக் கோள் ‘கார்ட்டோசாட்-2’ உள்பட 31 செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டை வெற்றி கரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப் பட்டது. ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த 17-வது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துதெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘பிஎஸ்எல்வி-சி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில்செலுத்திய இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் மூலம் புத்தாண்டில் விண்வெளி ஆய்வின்பயன்கள் நமது குடிமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ட்டோருக்கு சென்றடையட்டும்.
இஸ்ரோவின் 100வது செயற்கைகோள் ஏவப்பட்டது, நமதுபுகழுக்கும் சாதனைக்கும், இந்தியாவின் எதிர்கால விண்வெளி ஆய்வு திட்ட பணிகளுக்கும் முக்கியத்துவமாக அமைந்துள்ளது.
நமது வெற்றியில், மற்ற நாடுகளுக்கும் பயன்கிடைத்துள்ளது 6 நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைகோள்கள் உட்பட 31 செயற்கைகோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது’’ என்று பாராட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.