திராவிடம்பேசும் கமல் ஏன் நிறைந்த அமாவாசையில் அறிக்கை வெளியிட்டார். கலைஞர்போல வெளியே ஒன்று பேசி, உள்ளே ஒருநம்பிக்கையுடன் மக்களை ஏமாற்றுகிறார்' என்று மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழிசை செளந்தரராஜன்.
மதுரையில் இரண்டு நாள்கள் நடந்த பிஜேபி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், `தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த உள்ளோம். யாரோடுகூட்டு எப்போது கூட்டு என்பதைவிட எங்களைப் பலப்படுத்துவதில் தீவிரமாக உள்ளோம். வடமாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு உரியபாதுகாப்பு வழங்கவேண்டும். ஆண்டாள் பற்றி பேசிய வைரமுத்து கேட்டமன்னிப்பில் உள் உணர்வு இல்லை.
நாங்கள் புறவாசல் வழியாக வரத்தேவையில்லை. ஆயுதம் ஏந்துவோம் என்று பாரதிராஜா பயமுறுத்தும் விதத்தில் பேசியதால், ஆன்மிக வாதிகள் பயந்து விடுவார்கள் என்று அவர் கனவு காணக் கூடாது. வைரமுத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகிறார்கள். கமல்ஹாசன், அப்துல் கலாம் பிறந்த ஊரில் அரசியல்கட்சி தொடங்குவது அவர் விருப்பம். பி.ஜே.பி-தான் அப்துல் கலாமை மதித்து ஐனாதிபதியாக்கியது. அப்துல்கலாமை அரசியலாக்க கமல் முயல்கிறார். திராவிட அரசியல் நடத்துவேன் என்று கூறி ஆன்மிக நம்பிக்கை இல்லாத கமல்ஹாசன், ஏன் நிறைந்த அமாவாசை இரவு அரசியல் அறிவிப்பை வெளியிடவேண்டும்? திமுக தலைவர் கலைஞர் போன்று வெளியில் ஒன்றைபேசிவிட்டு, உள்ளே ஒருநம்பிக்கையை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்' என்றார்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.