ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, மறைமுக வரிசெலுத்துவோர் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 2017-18க்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கியஅம்சங்கள் வருமாறு:
இந்தியா மிகவேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும். 2018-19 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக இருக்கும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18 நிதியாண்டில் 6.75 சதவீதமாக இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தால் அல்லது கையிருப்பு விலை சரியில்லாவிட்டால் அவற்றை கட்டுப்படுத்த கண்காணிப்பு அவசியம்
வேளாண்மைக்கு ஆதரவு அளிப்பது, ஏர் இந்தியாவை தனியார்மயம் ஆக்குவது, வங்கிகளுக்கு மறு மூலதன நிதியை வழங்குதல் ஆகியவை அடுத்த நிதியாண்டில் வகுக்க வேண்டிய முக்கிய கொள்கைகளாக இருக்கும.்
மறைமுகவரி செலுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்தள்ளதை ஜிஎஸ்டி புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வரிவசூல் இதர நாடுகளைவிட கணிசமான அளவு குறைந்துள்ளது.
பண மதிப்பு நீக்கம் நிதிச்சேமிப்பை ஊக்குவித்துள்ளது.
வங்கிகளின் வராக்கடன் பிரச்னையை தீர்க்க திவால்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
சில்லரை விலை பண வீக்கம் 2017-18 நிதியாண்டில் சராசரியாக 3.3 சதவீதமாக இருந்துள்ளது. இது இதற்கு முந்தைய 6 நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைவு.
தீர்ப்பாயங்கள், நீதித்துறைகளில் வழக்குகள் நிலுவை மற்றும் தாமதம், இடையூறுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு வட்டிமானிய திட்டத்தில் குறுகிய கால கடன் வழங்க 20,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மறு சீரமைப்பு காரணமாக 2017-18 நிதியாண்டில் அந்நியநேரடி முதலீட்டு துறைகள் 15 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தால் தூய்மையான ஊரக பகுதிகள் எண்ணிக்கை 2014ம் ஆண்டில் 39 சதவீதமாக இருந்தது இந்தமாதம் வரை 76 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 2040ம் ஆண்டில் 4.5 லட்சம் கோடி டாலர் தேவைப்படும்.
கடன்சுமை மற்றும் கட்டண போட்டியால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிதி சிக்கலில் உள்ளன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதிபங்களிப்பு மிக குறைவுதான்.
வங்கிகளின் செயல்பாடு மந்த கதியிலேயே உள்ளது. வராக்கடனும் அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டியில் தமிழகம், குஜராத், மகராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் வர்த்தகர்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர்.
பருவநிலை மாற்றங்களால் விவசாயிகளின் வருவாயை 20 முதல் 25 சதவீதம் பாதிக்கும். எனவே, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.