மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார்.

பாஜக தலைமையிலான இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்த 5-ஆவது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரி ஆண்டு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இன்றி ரூ.2.5 லட்சமாகத் தொடரும்.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அளிக்கப்பட உள்ளது.

அதே சமயம் வருமான வரியில் ஏமாற்றம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

பெரு நிறுவனங்களுக்கான  'கார்ப்பரேட் வரி' குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான வரி தற்பொழுது உள்ள 30%  – லிருந்து  25% ஆக குறைக்கப்படுகிறது.   

தனிநபர் வருமான வரி வருவாய் உயர்ந்துள்ளது.

மாத ஊதியம் பெறுபவர்களுக்கான நிரந்தர வரிக் கழிவு ரூ.40 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

50 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயது வரையுள்ள மிக மூத்த  குடிமக்கள் ஆகியோர் மருத்துவக் காப்பீட்டுக்குச் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80G பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.

 

செல்போன்களுக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்வு. இதனால் செல்போன்களின் விலை உயர்கிறது.

மூத்த குடிமக்களுக்கு வங்கி சேமிப்பில் கிடைக்கும் வட்டியில், ரூ.10 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இதுவரை வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இது மாற்றப்பட்டு, மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத உற்பத்தியில் தன்னிறைவை அடைய தனியார் பங்களிப்புடன் ஆலைகள் அமைக்கப்படும்.


வருமான வரித்துறையின் கண்காணிப்பில் பிட்காயின் கொண்டு வரப்படும்.

எம்.பி.க்களின் வருவாயை வரைமுறைப்படுத்த புதிய சட்டம்.

 

இந்த ஆண்டில் 41 சதவீதம் புதிதாக வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 
இதன் மூலம் ரூ.90 ஆயிரம் கோடி கூடுதல் வருமான வரி கிடைத்துள்ளது.

வரி ஏய்ப்பு செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாகவும், துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாகவும் உயர்வு.

ஆளுநர்களுக்கான ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்வு.

பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று ரூ.80 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டம்

நாட்டின் தங்க பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க புதிய திட்டம்

3 பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கத் திட்டம்

பிட்காயின் பண முறை உள்ளிட்டவற்றை ஒழிக்க திட்டம் வகுக்கப்படும்

பொதுமக்கள் தங்கத்தை எளிதாக மாற்றிக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்

கிராமப்புறங்களில் 5 லட்சம்  இடங்களில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

இந்தியாவில் 124 விமான நிலையங்கள் உள்ளன. இது 5 மடங்காக உயர்த்தப்படும்.

பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று ரூ.80 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டம்

நாட்டின் தங்க பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க புதிய திட்டம்
 

அனைத்து ரயில் நிலையங்களிலும் வை-ஃபை வசதி.

ரயில்வே துறைக்கு 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

4000க்கும் மேற்பட்ட ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.

25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்.

பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.

3600 கிலோ மீட்டத் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும்.

நாடு முழுவதும் 600 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

2019ம் ஆண்டுக்குள் 4000 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

நாட்டில் உள்ள 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும்.

இந்தியாவில் விமான நிலயைங்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கப்படும்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்.

ரயில் தண்டவாளங்கள் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்டவாளங்களுக்கு பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும்.
 

காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும். 

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துக்கு உதவும் வகையில் ரூ.600 கோடி ஒதுக்கீடு.

சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு

 

சுகாதார மையங்களுக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும்.

ஏழை குடும்பங்களுக்கு புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

ஒரே நேரத்தில் 10 கோடி குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு என்பது மிகப்பெரியது.

முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில்களுக்கு ரூ.4.6 லட்சம் கோடி ஒதுக்கீடு. முத்ரா திட்டத்தின் கீழ் 2018-19ம் நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு.

அடுத்தாண்டுக்குள் 2 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்நடை, மீன்வளர்ப்புக்கென தனி நிதியம் அமைக்கப்படும். மீன்வளம் மற்றும் கால்நடை நிதியத்துக்கு என தனியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு

இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய 5வது பொருளாதார நாடாக மாறும்.


நாடு முழுவதும் புதிதாக 1.5 லட்சம் சுகாதார மையங்கள் அமைக்க திட்டம்

விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை போல, மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படும்.

அடுத்தாண்டுக்குள் 2 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்நடை, மீன்வளர்ப்புக்கென தனி நிதியம் அமைக்கப்படும். மீன்வளம் மற்றும் கால்நடை நிதியத்துக்கு என தனியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாக மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொண்டுள்ளது.

பழங்குடியினர் குழந்தைகளின் கல்விக்கு என ஏகலவ்யா தனித்திட்டம் தொடங்கப்படும்.

கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

பிடெக் மாணவர்கள் 1000ம் பேர் தேர்வு செய்யப்பட்டு பிஎச்டி படிக்க உதவி செய்யப்படும்.

குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய 5வது பொருளாதார நாடாக மாறும்.

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.22,000 கோடி ஒதுக்கப்படும்.

இயற்கை முறையிலான விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயம்

இலவச சிலிண்டர் திட்டம் விரிவுபடுத்தப்படும். 8 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1,290 கோடி ரூபாயை மூங்கில் கொள்கை வகுக்கப்படும்.

கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

One response to “மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்”

  1. THAPOVANAM says:

    EPS 95 பென்ஷன்தரர்கள்; தங்களது குறைந்த பட்ச பென்ஷன் மாதத்திற்கு RS 1000 / திலுருந்து RS 3000 வது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.திரு.ஜவடேகர் 2014 தேர்தலுக்குமுன் தங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்த பட்ச பென்ஷன் RS 3000 / கொடுப்போம் என்று கூறியிருந்தார் .ஆனால் வருடம் நான்கு ஆகியும் அதை பற்றி பேச்சையே காணோம். மத்திய சர்க்கார் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பென்ஷன் மாதத்திற்கு 9500 /. மேலும் RS 5000 வீதம் தருவதிற்கு ஆலோசிப்பதாக பேப்பர்களில் செய்தி வந்தது. இவர்களுக்கு எப்பொழுது விடிவு காலமோ

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...