கிராம பொருளாதரத்தை உண்மையில் வலுப்படுத்தும் பட்ஜெட்

மோடி அரசின் மத்திய பட்ஜெட் சாமானியனுக்கான, கிராம பொருளாதரத்தை உண்மையில் வலுப்படுத்தும்விதமான  பட்ஜெட். இங்கே இலவசங்கள் இல்லை, மானியங்கள் இல்லை, எனவே இங்கே ஏழைகளுக்கு ஒன்றும் இல்லை, நடுத்தர வர்க்கம் நாதியற்று இருக்கிறது என்ற குரல்களை எதிர் கட்சிகளிடம் அதிகம் காண முடிகிறது.

ஆனால் நடைமுறையிலோ முன் எப்போதும் கண்டிராத   விதமாக கிராம பொருளாதரத்தையும், விவசாயிகளின் வருவாயையும் இரட்டிப்பாக்கும் நோக்குடன்  14 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய கடன் மட்டும் 11 லட்சம் கோடி. மேலும் இரண்டு கோடி புதிய கழிப்பறைகள். நாடு முழுவதும் கிராமங்களில் ஐந்து கோடி பேர் பயனடையும் விதமாக அதிவேக இன்டர்நெட் வசதி,

உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.1400 கோடி, விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி, வீடு இல்லாதோருக்கு  ஒரு கோடி வீடுகள், 8 கோடி பெண்கள் பயன்பெறும் வகையில்  இலவச சமையல் 'காஸ்'. கரீப் பருவத்துக்கான அடிப்படை ஆதார விலையை உற்பத்தி செலவைவிட  1.5 மடங்கு அதிகம் உயர்த்தி  தருவது.

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதை தடுக்கும், 'ஆப்பரேஷன் கிரீன்' திட்டத்துக்கு  500 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கால்நடை வளர்ப்பு துறைகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த  10 ஆயிரம் கோடி. தேசிய மூங்கில் இயக்கத்துக்காக  1,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு என கிராம பொருளாதரத்தை உயர்த்தும் அனைத்து அடிப்படை காரணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

என்.ஆர்.எல்.எம்., எனப்படும் தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்திற்கான நிதி, 4,500 கோடி ரூபாயிலிருந்து, 5,750 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை, 2016 – 17ம் நிதியாண்டில், 42 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2019 மார்ச்சில், 75 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள், அதாவது 50 கோடி ஏழைகள் பயன்பெறும் வகையில் தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு  ரூ.5லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கபடுகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டமும் கூட.

வேளையில் இருக்கும் பெண்களுக்கு, பிடிக்கப்படும் பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி 12 சதவிதத்தில் இருந்து , 8 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இது  பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 'முத்ரா' திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 2015ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் 4.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு, 10.6 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் 76 சதவிதம் பேர் பெண்கள்.

விமான சேவை வழங்கும் திறனை, ஐந்து மடங்கு அதிகரிக்கவும், ஆண்டுக்கு, 100 கோடி விமான பயணங்களை கையாளவும் தொடங்கப்பட்ட உதான் திட்டத்தின் கீழ் 56 விமான நிலையங்களையும், 31 ஹெலிபேடுகளையும் இணைக்க முடிவு.

ரயில்வே வரலாற்றில், முதன் முறையாக, ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தவும், பயணியர் மற்றும் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தவும், இந்தாண்டு ரயில்வேக்கு, 1.48 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. 4000 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதையும், 4,000-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமனமும். ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு முக்கியத்துவமும் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் பிரதமர் மோடியின் பட்ஜெட் இலவசங்கள், மானியங்கள், கவர்சித் திட்டங்கள் இல்லாத தொலைநோக்கு பார்வை நிறைந்த ஒரு பட்ஜெட். விவசாய கடனுக்கு 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, விலைப் பொருள்கள்  வீணாகாமல் இருக்க சேமிப்பு கிடங்குகளுக்கு முக்கியத்துவம்.  இணையம் மூலமான வேளாண் சந்தையை குக்கிராமங்களில் இருந்தும் தடையின்றி செய்ய இணைய வசதி. இயற்க்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க சென்ற வருடம் அறிமுகப்படுத்தப் பட்ட பயிற்க்காப்பீடு  திட்டம்.

ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் அறிவித்த காலத்தில்  கூட ஒதுக்கப்படாத நிதியை இந்தமுறை ஒதுக்கியது, பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருந்த பல திட்டங்களை கடந்த சில வருடங்களிலேயே முடிக்கும் தருவாய்க்கு கொண்டு வந்தது. வருடம் வருடம் புதிய திட்டங்களை மட்டும் பெயரளவுக்கு அறிவிக்கும் ஏமாற்று வேலைகளை செய்யாமல், சட்ட சிக்கல், நில  ஆக்கிரமிப்பு போன்ற பிரச்சனைகள் இல்லாத திட்டங்களுக்கு மட்டும் முழு நிதியையும் ஒதுக்கி விரைந்து முடிப்பது என்று உதாரணங்களை அடிக்கி கொண்டே செல்லலாம்.

கடந்த 2014ல் 4.4 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை தற்போது 3.5 சதவீதம் மட்டுமே. இரு ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி பாதையில் செல்கிறது. நேரடி வரி வருவாய் வளர்ச்சி விகிதம் குறிப்பிடத் தகுந்த அளவு உயர்ந்துள்ளது.

கறுப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள், மகத்தான வெற்றி பெற்றுள்ளன. வரி ஏய்ப்புக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மூலம், இரு நிதியாண்டுகளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது.

 

ஆக மொத்ததில் இன்றைய இந்தியாவிற்கு தேவை சராசரி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான சூழலில் சொந்த வீடு. கல்வி மற்றும் மருத்துவச் சுரண்டல்களில் இருந்து விடுப்பு, இதை மையமாக வைத்துதான் கடந்த 5ந்து வருடமாக  மத்திய மோடி அரசும் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது என்பதே நிதர்சனம். 

நன்றி ; தமிழ்த் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...