மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு பாலஸ்தீனம் சென்றடைந்தார்.
இந்திய பிரதமர் ஒருவர் பாலஸ் தீனத்துக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால் இந்தச் சுற்றுப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. பாலஸ் தீனத்தின் ரமல்லா நகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள யாசர் அராஃபத் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மோடி மரியாதைசெலுத்தினார். அதிபர் முகமது அப்பாஸை சந்திக்கும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிகிறது.
முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீனம் செல்லும்வழியில் ஜோர்டான் சென்றார். தலைநகர் அம்மான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து மன்னர் இரண்டாம் அப்துல்லாவை மோடி சந்தித்துப்பேசினார். சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்தச்சந்திப்பு இரு நாடுகளுக் கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார். இந்தசந்திப்பு இருநாடுகளுக் கிடையிலான உறவில் ஒருபுதிய அத்யாயம் என மன்னர் அப்துல்லாவும் கூறியுள்ளார்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.