தமிழகத்தில் கோயில் நிலங்களை மீட்பதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க 6 வாரத்துக்குள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோயில் நிலங்களை மீட்பதுதொடர்பாக முத்துசாமி மற்றும் அண்ணாமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
அதில், கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக 6 வார காலத்துக்குள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசால் அமைக்கப்படும் குழு, தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை மீட்டு, சந்தைவிலைப்படி குத்தகை அல்லது வாடகைத் தொகையை நிர்ணயம் செய்யவேண்டும். சந்தை விலைப்படி நிர்ணயிக்கப்படும் புதிய தொகையை ஏற்போருக்கு மட்டுமே தொடர்ந்து வாடகை அல்லது குத்தகைக்கு விடவேண்டும். புதிய தொகையை ஏற்க மறுப்பவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு பொது ஏலத்தில் விடவேண்டும்.
கோயில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதனை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கோயில் நிலங்களை மீட்பதற்கு அறநிலையத் துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், கோயில் நிலங்களை மீட்பதில் தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.