ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவள் கலைமகள் சரஸ்வதி . எல்லாக்கலைகளுக்கும் இருப்பிடம் என நாம் கூறினாலும் , கண்ணுக்கு பளிச்சென்று தெரிவது வீணை தான்.
கலைமகள் சரஸ்வதியின் வீணை கலைகளின் குறியீடாக இருக்கிறது . சரஸ்வதி தேவி வீணையை எப்போதும் சரஸ்வதி தேவி இசைத்தபடியிருப்பது உலகில் கலைகள் தினமும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நமக்கு
தெரிவிப்பதாக உள்ளது.
வீணையின் தந்திகள் மிகவும் இழுத்து கட்டபட்டிருந்தால் அவை அறுந்துவிடும். அறுந்துவிடும் என்று தொய்வாக கட்டினால் நல்ல இசை வெளிப்படாது. எனவே எது சரியான நிலையோ அந்த நிலையில் நரம்புகள் கட்டபட்டிருந்தால் மட்டுமே சுருதி_சுத்தமாக வீணையில் நாதம்வெளிப்படும்.
நம் உடலும் வீணை போலத்தான். அதில் ஐம்புலன்கள் மனம், போன்ற அகக் கருவிகள் எல்லாம் தந்திகலே . அந்த அகக் கருவிகலாகிய தந்திகள் சரியானநிலையில் கட்டபட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஞானம் என்னும் இனிமையான ஸ்வரம் வெளிப்படும்.
இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் "இவ் உலக வாழ்வு பொய்யானது, இறைவனின் நிழலே என்றும் அடைக்கலம்தரும்' என்னும் உயர்ந்த மேலான ஞானத்தைப்பெற நம்மைத் தகுதிப்படுத்தி கொள்வோம். சரஸ்வதி 108 போற்றி
சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்
Tags; சரஸ்வதி பூஜை , சரஸ்வதிபூஜை, கலைமகள் சரஸ்வதி, ஆயகலைகள் அறுபத்து நான்கு
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.