திங்களன்று வெளியான குஜராத் உள்ளாட்சிதேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாஜக 47 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
குஜராத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சனிக் கிழமையன்று தேர்தல் நடந்தது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், 17 தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட 93 உள்ளாட்சி அமைப்புபதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்ததேர்தலில் பதிவான வாக்குகள் திங்களன்று எண்ணப்பட்டடன.
வெளியான தேர்தல்முடிவுகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 16 இடங்களில் காங்கிரஸ் வென்றது. நான்கு இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர். அதே நேரம் ஆறு இடங்களில் எந்தவேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 59 இடங்களில் வெற்றிபெற்று இருந்தது. காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது பாஜக கடந்த முறையினைவிட குறைவாக இடங்களைத்தான் வென்றுள்ளது. அதேசமயம் ஆளும் பாஜகவை விடவும், காங்கிரஸ் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.