சித்தராமையாவுக்கு மோடி பற்றிப்பேச எந்த தகுதியும் இல்லை

ஊழல் ஆட்சி நடத்தி வரும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி பற்றிப்பேச எந்த தகுதியும் இல்லை என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பாஜக தேசியதலைவர் அமித்ஷா 3 நாள் சுற்றுப் பயணமாக மங்களூரு வந்தார். குக்கே சுப்பிர மணியா, உடுப்பி கிருஷ்ணா உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைசெய்தார். மங்களூருவில் சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட பா.ஜ.க தொண்டர் தீபக் ராவின்வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..இதனைதொடர்ந்து மங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அமித்ஷா பேசியதாவது,

 நாடுமுழுவதும் கிடைத்துள்ள பா.ஜ.கவின் வெற்றி கர்நாடகாவிலும் தொடரும். ஊழல் ஆட்சி நடத்திவரும் சித்தராமையாவுக்கு மோடி பற்றிபேச எந்த தகுதியும் இல்லை – அமீத் ஷா

மத்திய அரசுதரப்பில் ஒதுக்கப்பட்ட நிதியை கர்நாடக அரசு முறையாக பயன் படுத்தவில்லை. முதல்வர் சித்தராமையாவுக்கு முறையாக ஆட்சிநடத்த தெரியவில்லை. பிரதமர் நரேந்திரமோடி கூறியபடி, இங்கு 10 சதவீத கமிஷன் ஆட்சிதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் தினமும் புதுப்புது ஊழல்புகார்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது ஏராளமான மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன.

கர்நாடக மக்கள் வளர்ச்சியை விரும்புவதால் ஆட்சிமாற்றம் ஏற்படுவது உறுதியாகி விட்டது. நாடு முழுவதும் கிடைத்துள்ள பா.ஜ.கவின் வெற்றி கர்நாடகாவிலும் தொடரும். ஊழல் ஆட்சி நடத்திவரும் சித்தராமையாவுக்கு மோடி பற்றிபேச எந்த தகுதியும் இல்லை. சித்தராமையாவின் ஆணவபேச்சுக்கு, தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...