திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வட கிழக்கு மாநிலங்களுக்குான பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகால யாவில் இழுபறி நீடித்துவருகிறது.
திரிபுராவில் 41 இடங்களில் முன்னிலையுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இதன் மூலம் அங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தியாவில் இனி இடதுசாரிகளுக்கு எந்தஉரிமையும் இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் எங்களுடன் கூட்டணி அமைத்தகட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமிளிக்கப்படும் என்பதை உறுதிபடுத்துகிறேன்.
ஒருவேளை மேகாலயாவில் பாஜக ஆட்சி அமைக்க இயலா விட்டாலும் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இன்னும் கேரளா, ஒடிஸா மற்றும் மேற்குவங்கம் மட்டும்தான் மீதமுள்ளது.
இந்தமாபெரும் வெற்றி அளித்த உற்சாகத்துடன் கர்நாடக தேர்தலைச்சந்திக்க உள்ளோம். எனவே கர்நாடகத்திலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தவெற்றி அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக-வுக்கு தொடர்ந்து கிடைத்துவரும் இந்தவெற்றி 2019-ல் நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமளித்துள்ளது. இது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத்தவெற்றி. இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகள் போதிய வளர்ச்சியை அடையவில்லை என்று கூறிய பிரதமர் அங்கு நலத் திட்டப் பணிகளை துரிதப்படுத்தினார். இது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.