திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா பாஜக வியூகம் வென்றது

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில், பாஜக தேர்தல் பொறுப் பாளர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றியை உறுதிசெய்துள்ளனர்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில தேர்தல் வியூகங்களைவகுக்க பாஜக மேலிடம் சிறப்பு பொறுப்பாளர்களை நியமித்திருந்தது. அவர்கள் 3 மாநிலங்களின் நிலவரம் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து அதற்கேற்ப தேர்தல்பிரச்சாரங்களை வகுத்துக் கொடுத்துள்ளனர். மேலும், வாட்ஸ் அப் போன்ற சமூக வலை தளங்களை மிக கச்சிதமாகப் பயன் படுத்தி தேர்தலில் பாஜக.வின் வெற்றியை உறுதிசெய்துள்ளனர்.

நாகாலாந்தைப் பொறுத்தவரையில் தேர்தல் கூட்டணியை தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் (என்டிபிபி) பாஜக உறுதி செய்து விட்டது. ஆனால், நாகா பிரிவினைவாத பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வரை தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று சிவில்சொசைட்டி குரூப் அமைப்பும், நாகா பழங்குடியின ஹோகோ அமைப்பும் அழைப்பு விடுத்தன. அதற்கு 11 அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டனர்.

அவர்களில் பாஜக.வை சேர்ந்த 2 பிரதிநிதிகளும் அடங்குவர். அவர்களை உடனடியாக பாஜக தேர்தல்பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கினர். அத்துடன் பிரதமர் மோடியின் முயற்சியால் கடந்த 2015-ம் ஆண்டு நாகா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாகாபிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என்று பாஜக கூறியது. அத்துடன் தடையின்றி தேர்தல் நடக்க பாஜக நடத்திய சமாதான பேச்சு வார்த்தைக்கும் வெற்றி கிடைத்தது.

பொதுவாக திரிபுரா உட்பட 3 மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை தனித் தனியாக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டிய லிட்டனர். அந்த பிரச்சினைகளையும், அதற்கான தீர்வு களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன் படுத்தினர். வழக்கமான தேர்தல் பிரச்சாரத்துடன் நவீன தகவல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி நடத்திய பிரச்சாரத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

அதன் விளைவாக நாகாலாந்தில் என்டிபிபி கூட்டணி கட்சியுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த மாநிலத்தின் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு. தவிர மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக பிரியங் பாண்டே செயல்பட்டார். பாண்டே தலைமை யிலான குழுவினர், ‘இந்துத்வா’வை திணிக்க பாஜக – ஆர்எஸ்எஸ் முயற்சிக்கின்றன என்ற பிரச்சாரங்களை முறியடிக்க வியூகம் வகுத்தனர். பழங்குடியின மக்களை நேரில்சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தனர். அவற்றுக்கு தீர்வுகாண உறுதி அளித்தனர்.

இது குறித்து பாண்டே கூறும்போது, ‘‘பிரதமர் மோடியும் கட்சித்தலைவர் அமித்ஷாவும் வகுத்து கொடுத்த திட்டங்களின்படி நாங்கள் செயல்பட்டோம். பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளின் கடின உழைப்பும் கட்சிக்கு நல்லபலனை பெற்றுத்தந்துள்ளன’’ என்றார்.

திரிபுராவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக ரஜத்சேத்தி நியமிக்கப்பட்டார். இந்த மாநிலத்தில் எப்படி தேர்தல் வியூகம் அமைக்க வேண்டும் என்பது குறித்து சேத்திக்கு மோடியும் அமித் ஷாவும் விரிவாக விளக்கி உள்ளனர். அசாம், மணிப்பூர் தேர்தலின் போது பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவுடன் இணைந்து பணியாற்றியவர்தான் சேத்தி. அதனால், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவேபெற்ற அனுபவத்தை திரிபுரா தேர்தலில் நன்கு பயன்படுத்தி கொண்டார்.

இதுகுறித்து சேத்தி கூறும்போது, ‘‘ராம் மாதவ், மோடி, அமித் ஷா என்ன சொன்னார்களோ, அதை நாங்கள் தேர்தலில் அப்படியே பின்பற்றினோம். முதலில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான பயத்தை மக்கள் மனதில் இருந்து போக்க வேண்டும் என்று கட்சிதலைவர்கள் கூறினர். கம்யூனிஸ கொள்கைகளை எதிர்த்தவர்கள் மீது பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. அந்தப் பயத்தை மக்களிடம் இருந்து போக்க நாங்கள் வியூகம் வகுத்தோம்.

அதன்பிறகு தேர்தல் களம் மக்கள் போராட்டமாக மாறியது’’ என்றார். அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் பக்கபலமாக இருந்துள்ளது.

மேகாலயாவிலும் மேலிடம் முதல் பூத்வரை பல வியூகங்களை வகுத்து பாஜக தேர்தலில் களமிறங்கியது. கடந்த தேர்தலின்போது வெறும் 1.27 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றது. அத்துடன் போட்டியிட்ட 13 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.

ஆனால், இந்தத்தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டது.

இது குறித்து மேகாலயாவின் பாஜக அமைப்பு செயலாளர் சத்யேந்திர திரிபாதி கூறும்போது, ‘‘பிரதமர் மோடியின் வளர்ச்சி கொள்கைகளான, ‘எல்லோருடனும் எல்லோருக்குமான வளர்ச்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தோம்’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...