சென்னையில் காலமான ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிக சுவாமிகளின் உடல், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் உள்ள ஆசிரமவளாகத்தில், (பிருந்தாவன பிரவேசம்) நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11வது பட்டமாக திகழ்ந்த ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிக சுவாமிகள், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று சென்னையில் முக்தி அடைந்தார்.
அவரது உடல், அமர்ந்தநிலையில் கொண்டு வரப்பட்டு, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் உள்ள மடத்தில், பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அகோபில மடம் ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், விஷ்வ இந்துபரிஷத் செயல் தலைவர் வேதாந்தம்ஜி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஜீயர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில், தேவஸ் தானத்தில் இருந்து மாலை கொண்டு வரப்பட்டு, ஜீயர் உடலுக்கு சாற்றி, அஞ்சலி செலுத்தப் பட்டது. பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சீடர்களுடன் வந்த நித்தியானந்தாவும், ஜீயரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினார்.
சம்பிரதாயப்படி, வேதபாராயணம் பாடப்பட்டு, கூடையில் அமர்ந்தநிலையில் வைத்து, சீடர்களால் தலையில் சுமந்து செல்லப்பட்ட ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிக சுவாமிகள் உடல், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள பெரிய ஆசிரம வளாகத்தில், (பிருந்தாவன பிரவேசம்) நல்லடக்கம் செய்யப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம மேலாளர் வீரராகவ தேசிகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.