சீன அதிபருக்கு மோடி வாழ்த்து

சீன அதிபர் ஷீ ஜின் பிங்கை தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு, மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சீனாவின் ஷின்சுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:சீன அதிபர் ஷீ ஜின் பிங்கை, இந்திய பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவரிடம், சீன அதிபராக 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்வு செய்யப் பட்டதற்கு தனது வாழ்த்தை மோடி தெரிவித்தார்.
சீன அதிபரா ஷீ ஜின்பிங் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டதில் இருந்து, அந்நாட்டின் முழு ஆதரவும் அவருக்கு இருப்பதை வெளிப்படுத்துவதாகவும் மோடி கூறினார்.


முன்னதாக, சீனாவின் வெய்போ சமூகவலைதளப் பக்கத்தில் ஷீ ஜின்பிங்குக்கு மோடி தனதுவாழ்த்தை திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். அந்தவாழ்த்துச் செய்தியில், இரு நாடுகளின் உறவை மேலும் விரிவுப் படுத்துவதற்கு இணைந்து செயல்பட தாம் காத்திருப்பதாக மோடி குறிப்பிட்டிருந்தார் என்று அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன நாடாளுமன்றம் கடந்தவாரம், ஷீ ஜின்பிங்கை (64) மீண்டும் தங்கள் நாட்டு அதிபராக தேர்வு செய்தது. இதையடுத்து, சீன முதல் அதிபரான மாவோவுக்குப் பிறகு, அந்நாட்டின் சக்தி வாய்ந்த தலைவராக ஷீ ஜின்பிங் உருவெடுத்துள்ளார்.


சீனாவின் குவிங்டோ நகரில் வரும் ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடை பெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது ஷீ ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்துபேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...