தலித்மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்

தலித்மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலித்சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடைவிதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல்செய்த சீராய்வு மனுவினை செவ்வாய் மதியம் விசாரித்த உச்சநீதிமன்றமானது,  எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட  தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில் தலித்மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலித்சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு தலித்சமூகத்தினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

அப்பொழுது அவர்களிடம் தலித்மக்களின் உரிமைகளை காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது நலமான வாழ்வே இந்த அரசின் முதண்மையான் குறிக்கோள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்ததாக, சந்திப்பின்பொழுது உடன் இருந்த பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...